புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

26 March 2015

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 28 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம் 
               
சார்பில் 28 மாவட்டங்களில்  01.04.15 அன்று  கண்டன ஆர்பாட்டம்

மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் 

அறிக்கை 

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக   இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை   தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை,  எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
           தேர்வு அறைகளில்  மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள்  கண்டு பிடித்தால்,  அறை கண்காணிப்பாளர்கள்மீது 
பணி  இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை  எடுத்துள்ளது.    பள்ளிக்கல்வித்துறையின்  நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின்  செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15  அன்று  மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை   தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                              இப்படிக்கு 
                                                                                                      ( R.செல்வம்) 
                                                                               மாநில செய்தி தொடர்பாளர் 
                                     தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் 

No comments: