புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

30 September 2015

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற, மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு இலண்டன்,உலக தமிழ் செம்மொழி பல்கலைக்கழகத்தால்மதிப்புறு  முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மாநில கழகத்தின் சார்பாக  சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா 







17 September 2015

உங்கள் CPS STATEMENT தெரிந்துகோள்ள வேண்டுமா?

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்


ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

11 September 2015

TNHSPGTA SPECIAL MEETING AT TRICHY ON 12.09.2015

             An important meeting will be held on Tomorrow 12/09/15 AM Saturday  at Trichy Syed moorsha HSS(Marakadai stop) regarding State President  felicitation function. All the State  0ffi. Bearers/Zonal sec /Dt Pre/Sec. should attend.

With concern,
Prabakaran. R
State General Secretary

TNHSPGTA


5 September 2015

முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

அன்புடையீர், வணக்கம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து நிலை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியில் மிடுக்கைக் கொண்டு வந்ததில் காவலராகவும் ,பணிச்சூழலில் அவர்களுக்கு ஒரு இடையூறு என்றால் குரல் கொடுக்கும் சிங்கமாகவும், கனவிலும், நனவிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தையும்.மாநிலத்தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் பற்றி புறங்கூறியும், அவதூறு பரப்பியும், வதந்தி பரப்பியும் வாழ்க்கை நடத்தும் பதர்களுக்கு பேச்சால் பதில் தராமல், முதுகலை ஆசிரியர்களின் பணித்தொகுதி பாதிப்புகளைக் களைந்து செயலால் பதில் தருவதில் தன்னிகரில்லாத தலைவராகவும், நம்மைப் பற்றி யார் குறை கூறி பேசினாலும், அவர்களைப் பற்றியும், கோயபல்ஸ்களின் அமைப்பு பற்றி உங்கள் வாயால் எதுவும் கூறக்கூடாது என்று சொல்லும் பெருந்தன்மை மிக்கவராகவும், முதுகலை வேதியியல் ஆசிரியராக இருந்தாலும், நம் செந்தமிழை உச்சரிப்பதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் தமிழ்ப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரின் மாணவர் போலவும், பள்ளியில் பணியோடு, சிறு கூடுதல் பொறுப்பு கிடைத்தாலே பிறரை ஏற, இறங்க பார்ப்பவர்களுக்கு மத்தியில்,தனக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம், முதுகலை ஆசிரியர் பணித்தொகுதி உயர்வடைந்தால் போதும் என பாடுபட்டு வருவதில் தியாகத்தின் உருவமாய் வாழ்ந்து வருபவரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்து வருபவராம் ஐயா, உயர்திரு, வே.மணிவாசகன் அவர்களின் சேவையைப் பாராட்டி தமிழ் செம்மொழி பல்கலைக்கழகம் அன்னாருக்கு முனைவர் பட்டம் அளித்து பெருமை படுத்தியுள்ளது. முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம்  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. எனவே அனைத்து நிலை  மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள், நண்பர்கள்,  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் தங்களின் மேலான வருகையை எதிர்நோக்கும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அடங்கிய விழாக்குழுவினர்.
(இந்த செய்தியை படிக்கும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தம் பள்ளி சக ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், இச்செய்தியைப் பகிரும்படி அன்புடன் வேண்டுகிறோம்).
நன்றி கலந்த வணக்கத்துடன்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.தமிழ்நாடு.


அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும்  கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

2 September 2015

நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது

மிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்   மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும்   முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்காக ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் அற வழியில்  குரல் கொடுத்தும்,தொடர்ந்து போராடி வரும்   நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது அளித்து பாராட்டு தெரிவித்த தமிழ் செம்மொழிப்பல்கலைக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.விருது பெற்ற மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னார் நல்ல ஆரோக்கியத்தையும்,நீடித்த வாழ்நாளையும் பெற்று வாழ்க வளமுடன் என மனமுவந்து வாழ்த்துகிறோம்.நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்