புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

4 March 2015

"மாணவர்களை மனிதநேயமிக்கவர்களாக உருவாக்க வேண்டும்' : தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மாணவர்களை மனித நேயம் மிக்கவர்களாக உருவாக்க சாரண ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கத்தைத் தொடங்க அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சாரண அடிப்படைப் பயிற்சி முகாம் ஒகேனக்கல்லில் நடைபெற்று வருகிறது.
பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையம் சார்பில் நடைபெறும் இந்த முகாம் கடந்த பிப்.23-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 209 ஆசிரியர்களுக்கு அடிப்படை சாரண ஆசிரியர் பயிற்சி, 21 ஆசிரியர்களுக்கு முன்னோடி சாரண ஆசிரியர் பயிற்சி என மொத்தம் 230 ஆசிரிய, ஆசிரியைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முகாமைப் பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது:
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் தான் அதிக நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கம் தொடங்க ஆசிரியர்களுக்கு சாரணப் பயிற்சி ஒரே கட்டமாக அளிக்கப்படுகிறது. 10 முதல் 14 வயது வரை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சாரண பயிற்சியை அளிப்பதன் மூலம் அவர்களின் நாட்டுப் பற்று, தலைமைப் பண்பு, சேவை மனப்பான்மை ஆகிய நல்ல குணங்களை வளர்க்க முடியும்.
இந்தப் பயிற்சி மூலம் மனித நேயம் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு சாரண ஆசிரியரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்டச் சாரணச் செயலர் பா.வெங்கடேசன், பென்னாகரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ.சுதாகர், சாரண பயிற்றுநர்கள் பாலசுந்தரம், தனபாலன், ஏகாம்பரம், ஜம்சித் மொகைதீன், சீனிவாசவரதன், சம்பத்குமார், ரங்கநாதன் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.

No comments: