புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

31 March 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் விடுத்துள்ள அறிக்கை:மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளர் சஸ்பெண்டை கண்டித்து 1ம் தேதி ஆர்ப்பாட்டம் முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Dinakaran Dharmapuri தமிழகத்தில் 1980ம் ஆண்டு முதல் பிளஸ்2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. துவக்கத்தில் 38 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தேர்வு துறை தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேல் எடுக்க நினைக்கிறது. தேர்வு நடக்கின்ற மையங்களுக்கு இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள், மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய் வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். 

30 March 2015

தருமபுரி ; தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கக் காலத்தில் 38 சதமாக இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 90 சதத்தைக் கடந்து விட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தேர்வுத்துறை கடுமையான, தேவையற்ற சில நடவடிக்கைகளை ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்து வருகிறது.

29 March 2015

100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?

 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.

               தங்கள் மாவட்டம், மாநிலத்திலேயே, தேர்ச்சி விகிதத்தில் முதல் மாவட்டமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வித்துறை அதிகாரிகளும் இந்தக் கொடுமையை கண்டுகொள்வதில்லை என்ற புகார்களும் உண்டு.

               ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்புமிக்க கல்விமுறையானது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது, இதுபோன்ற ஒரு கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருவோர், எப்பேர்பட்டவர்களாக இருப்பர் போன்ற அம்சங்களை நினைத்துப் பார்க்கும்போது, சமூக அக்கறையுள்ள பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

26 March 2015

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 28 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம் 
               
சார்பில் 28 மாவட்டங்களில்  01.04.15 அன்று  கண்டன ஆர்பாட்டம்

மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் 

அறிக்கை 

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக   இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை   தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை,  எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
           தேர்வு அறைகளில்  மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள்  கண்டு பிடித்தால்,  அறை கண்காணிப்பாளர்கள்மீது 
பணி  இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை  எடுத்துள்ளது.    பள்ளிக்கல்வித்துறையின்  நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின்  செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15  அன்று  மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை   தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                              இப்படிக்கு 
                                                                                                      ( R.செல்வம்) 
                                                                               மாநில செய்தி தொடர்பாளர் 
                                     தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் 

பலிகடா ஆசிரியரா? நன்றி தினமணி 25.03.15

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
 இந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள் அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர்
 களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.
 இவ்வாறான சூழல் உருவெடுத்தமைக்கு கல்வி வணிகமய
 மானது மட்டுமன்றி, கல்வித் துறையும்கூட ஒரு முதன்மைக் காரணம் என்பதால், கல்வித் துறை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடுபடுகிறது.
 உடனடியாக கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு என்னவென்றால், ஒரு தேர்வுக்கூடத்தில் ஒரு மாணவர் காப்பியடிப்பதை அந்த அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடிக்காமல் வேறு யாராவது கண்டுபிடித்தாலோ அல்லது பறக்கும்படை கண்டுபிடித்தாலோ அந்த அறையின் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது .
 ஒரு மாணவன் காப்பியடிப்பதை அனுமதிக்கும் அறைக் கண்
 காணிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

9 March 2015

கடலூரில் நடைபெற்ற ஜேக்டோ கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் நடைபெற்றது

கடலூரில்   நடைபெற்ற ஜேக்டோ கூட்டத்தில்  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன்  தலைமையில் நடைபெற்றது 



















6 March 2015

வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...! புத்தகங்கள் நம் இரண்டாவது இதயங்கள்.

நம் ஆன்மாவை ஆனந்த மயமாக்கும் காகித ஆலயங்கள். பரந்தவானில் பறந்த பறவை ஓய்வெடுக்கக் கூடு திரும்புமே அதைப்போன்று, நாம் என்ன வேலைசெய்தாலும் நம் மனம் நிம்மதியடைவது புத்தகங்களை வாசிக்கும்போது மட்டும்தான். சூடுதான் சூரியனின் அடையாளம்; புத்தக வாசிப்புதான் உயிர்வாழ்தலின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிதிலமடைந்திருக்கலாம். ஆனால் அன்று எழுதப்பட்ட புத்தகங்கள் சுவடிகள் தாண்டி,அச்சு இயந்திரம் தாண்டி இதோ நம்தொடுதிரை அலைபேசிகளிலும் இணையப் பக்கங்களிலும் இன்னும் இளமையோடு நம் மனதோடு மவுனமாய் பேசிக்கொண்டிருக்கிறதே. காலத்தைக் காலமாக்கிய இந்தச் செப்படி வித்தை எப்படி நடந்தது? மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே! வாசிப்புதான் வசிப்பின் அடையாளம். வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காதநாள்.

4 March 2015

"மாணவர்களை மனிதநேயமிக்கவர்களாக உருவாக்க வேண்டும்' : தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மாணவர்களை மனித நேயம் மிக்கவர்களாக உருவாக்க சாரண ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கத்தைத் தொடங்க அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சாரண அடிப்படைப் பயிற்சி முகாம் ஒகேனக்கல்லில் நடைபெற்று வருகிறது.
பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையம் சார்பில் நடைபெறும் இந்த முகாம் கடந்த பிப்.23-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 209 ஆசிரியர்களுக்கு அடிப்படை சாரண ஆசிரியர் பயிற்சி, 21 ஆசிரியர்களுக்கு முன்னோடி சாரண ஆசிரியர் பயிற்சி என மொத்தம் 230 ஆசிரிய, ஆசிரியைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முகாமைப் பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது:
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் தான் அதிக நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கம் தொடங்க ஆசிரியர்களுக்கு சாரணப் பயிற்சி ஒரே கட்டமாக அளிக்கப்படுகிறது. 10 முதல் 14 வயது வரை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சாரண பயிற்சியை அளிப்பதன் மூலம் அவர்களின் நாட்டுப் பற்று, தலைமைப் பண்பு, சேவை மனப்பான்மை ஆகிய நல்ல குணங்களை வளர்க்க முடியும்.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

 அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆன்-லைன் விண்ணப்பம் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதிக்காக ஆண்டுக்கு இரு முறை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது.இந்த ஆண்டுக்கான முதலாவது துறைத்தேர்வுகள் மே 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த அழுத்தத்தை திணிக்க முயல வேண்டாம் : வைகோ

  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் நாளை (05.03.2015) தொடங்குகின்றன. மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் அல்ல.

3 March 2015

அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம்

உலகின் மூத்த மொழியாம் தமிழை, எழுத்தாளர்கள் கவிஞர், தமிழாசிரியர்கள் என்று யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் தமிழை வளர்க்கின்றனர் என்று உ.சகாயம் ஐஏஎஸ் பேசினார். நாமக்கல் லத்துவாடியில் நம்பிக்கை இல்ல அடிக்கல் நாட்டு விழா நடந்தது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அறிவியல் நகரத் துணைத் தலைவருமான உ.சகாயம் தலைமை வகித்துப் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியில் இருந்த கடந்த 2010-ம் ஆண்டு முசௌரி மலை நகருக்கு பயிற்சிக்கு சென்றேன். 58 நாள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு சென்ற 8-வது நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.

ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள்

 தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன். ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. "இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். எந்த மெக்காலேவின் ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதுஆய்வுக்குரியது.

மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம்

பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் உருவாக்கும் 9 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். சேலம் அயோத்தியாப்பட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், புதிய நிர்வாக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், இஸ்ரோ மாணவர் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் படிக்கும் போதே, அனைத்து துறைகளிலும் முழுமையான திறன் பெற்றவர்களாக வெளி வருவார்கள். இது போன்ற சிறந்த மாணவர்களை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம்.

மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு டி.ஆர்.பி.,

சார்பில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தகுதியுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மதுரை ஓ.சி.பி.எம்., மேல்நிலை பள்ளியில் ஏற்கனவே நடந்தது. இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மார்ச் 3 மற்றும் 4ல் மீண்டும் நடக்கிறது. இது இறுதி வாய்ப்பாகும் என மதுரை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.