புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

19 December 2015

மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்  அவர்களின் செய்தி 
நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

       பள்ளிக்கு வருகை தரும் அதிகாரிகளில் முதுகலை ஆசிரியர்களை பாடம் சம்மந்தமாக கேள்வி கேட்கும் உரிமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அவருக்கு மேல் உள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமன முதுகலை ஆசிரியராக பணியாற்றி கூட பதவி உயர்வு பெற்றிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. எந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கும் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. இதனை ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அறிந்து கொண்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.
நமக்கென்ன என இருப்பதற்கு பொறுப்புகள் தேவையில்லை. பொறுப்பு என்று எங்கு வந்தாலும் மன அழுத்தம் இருக்கும். இதனை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் போதுதான் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வெற்றி பெற முடியும்.
தற்போது பணியேற்றிருக்கும் சில முதுகலை ஆசிரியர்களுக்கு தஙகள் பணிசார்ந்த நிகழ்வுகளில் உரிமையை விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
கட்செவியில் பல புரட்சிகரமான செய்திகளைக் கொண்டு வரும் நமது இளைய வரவுகள்,  அதிகாரிகள் என்றவுடன் நாம் 37 ஆண்களாக போராடிப் பெற்ற சுயமரியாதையை உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் அவ்வப்போது நெஞ்சிலே ஊசலாடுகிறது.
சில மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட எது நடந்தால் என்ன என நினைப்பதை போன்று உணர்கிறேன். நம்மிலே சில ஆசிரியர்கள் நம்மை ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அதிகார வர்க்கம் என்று வந்து விட்டால் கூனிக்குறுகி அடங்கி விடுவார்கள். இவ்வாறு உள்ளவர்கள் பாதிக்கப்படும் போது நாமே களத்தில் இறங்கி அவர்களையும் நமது பணித் தொகுதியின் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும். ஏதோ இதனை விளையாட்டாக மாவட்டப் பொறுப்பாளர்கள் கருதக் கூடாது. முதுகலை ஆசிரியர்களின் பணித் தொகுதியின் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே உள்ளது என்பதனை நெஞ்சிலே நிறுத்துங்கள்

வே.மணிவாசகன்
மாநில தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)

No comments: