புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label GENERAL NEWS. Show all posts
Showing posts with label GENERAL NEWS. Show all posts

23 April 2015

இன்று உலக புத்தக தினம்

பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 March 2015

அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம்

உலகின் மூத்த மொழியாம் தமிழை, எழுத்தாளர்கள் கவிஞர், தமிழாசிரியர்கள் என்று யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் தமிழை வளர்க்கின்றனர் என்று உ.சகாயம் ஐஏஎஸ் பேசினார். நாமக்கல் லத்துவாடியில் நம்பிக்கை இல்ல அடிக்கல் நாட்டு விழா நடந்தது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அறிவியல் நகரத் துணைத் தலைவருமான உ.சகாயம் தலைமை வகித்துப் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியில் இருந்த கடந்த 2010-ம் ஆண்டு முசௌரி மலை நகருக்கு பயிற்சிக்கு சென்றேன். 58 நாள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு சென்ற 8-வது நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.

19 February 2015

2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

           தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

28 December 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! மாற்றுக் கல்விக்கான விதை

         தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங் களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் அறியப்பட்ட கவிஞர் நா.                  முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது.
நேற்றைய - இன்றைய கல்வி நிலை, கல்வி முறைகள், கற்றல், கற்பித் தல் செயல்பாடுகள், அவற்றினால் நிகழ்ந்துள்ள சமூகத் தாக்கங்கள் என நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுய சிந்தனைகளோடு நம்மிடம் கலந்துரை யாடுகின்றன. சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக் கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம் என ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும் தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பு கின்றன. கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய மாற்றுக்கல்விக்கான சிந்தனை விதைப்பே இந்நூல்.
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! 
நா.முத்துநிலவன் 
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர், 
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289 
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014 
பக்கம்: 156 | விலை: ரூ.120/- 
தொடர்புக்கு: 04362 239289

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்: ராமதாஸ் கோரிக்கை

       மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

23 December 2014

கற்றலில் சிரமத்தை எளிதாக்கும் 15 ஆண்டு வெற்றிப் பயணத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல்

கற்றலில் சிரமத்தை எளிதாக்கும் 15 ஆண்டு வெற்றிப் பயணத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல்

கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான மதிப்பீடு, ஆலோசனை, மாற்றுக் கல்வி முறையை செயல்படுத்தி கற்றலை எளிமைப்படுத்தும் வெற்றிப் பயணத்தில் 15ம் ஆண்டை எட்டியுள்ளது ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியாக சேலம் பாகல்பட்டியில் செயல்படுகிறது. கற்றலில் சிரமப்படும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படை க்கச் செய்தது குறித்து இதன் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் 600 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கியுள்ளது. முன்னணி ஐ.டி. நிறுவனங்கள், அனிமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாட்டை மிகச்சரியாக மதிப்பீடு செய்து அவர்களுக்கான மாற்றுக் கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. ஓப்பன் ஸ்கூல் சிஸ்டம், நாடகம், இயற்கை வேளாண்மை, ஓவியம், கலைப்பொருட்கள் செய்தல், பறவைகள் பார்த்தல், ரோபோட்டிக் என குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் தொழில் திறன் பயிற்சிகள் அளித்து அவர்களது தன்னம்பிக்கை மேம்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்குள் உள்ள தனித்திறனை கண்டறிதல் மற்றும் தொடர் பயிற்சிக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சித் திட்டங்கள் பல்வேறு பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. கற்றலில் சிரமப்படும் மாணவர்களுக்கான எந்த சேவைக்கும் எங்களை அணுகலாம். இன்றைய புதிய தொழில் நுட்பத்தில் மாற்றுக் கல்வித் திட்டம் மூலம் கற்றலில் சிரமத்தை எளிதாக்கலாம். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.