23 December 2015
21 December 2015
தோல்வியின் அடையாளம் "தயக்கம்" வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!
தோல்வியின் அடையாளம் "தயக்கம்"
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"...
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!
* வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது,
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது
* அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.!
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!
* சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."
* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும்
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்...
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்...
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்.
19 December 2015
மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.
மாநில தலைவர்
நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?
குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும்.
- ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்
நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.
இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.
ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது.
நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும் ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.
* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.
* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.
* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும் இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.
* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.
* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.
* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.
* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.
* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.
* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.
* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.
* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள்.
* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.
* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.
* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார்.
* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார்.
* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.
* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார்.
* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?
நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?
30 November 2015
17 October 2015
30 September 2015
17 September 2015
உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.
11 September 2015
TNHSPGTA SPECIAL MEETING AT TRICHY ON 12.09.2015
5 September 2015
முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
2 September 2015
நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது
30 August 2015
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி, மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்
29 August 2015
27 August 2015
25 August 2015
22 August 2015
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி, மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்
21 August 2015
தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுகலை ஆசிரியர் காலி பணி இடங்கள் விவரம்
TAMIL
1 KADAGATHUR
2 LALIGAM
ENGLISH
1 KADATHUR BOYS
2 KADATHUR BOYS
3 VENKATAMPATTI
4 THEERTHAMALAI
5 KRISHNAPURAM
6 HALE DHARMAPURI
7 HARUR GIRLS
8 MUKKAREDDIPATTI GIRLS
9 LALIGAM
PHYSICS
1 AMMANIMALLAPURRAM
2. IRUMATHUR
3 PALACODE BOYS
4 DHARMAPURI BOYS
CHEMISTRY
1 RAMIYAMPATTI
2 MUKKALNAICKANPATTI
3 MUKKAREDDIPATTI GIRLS
MATHS
1 DHARMAPURI GIRLS
ECONOMICS
1 P.GOLLAPATTI
2 PAPPIREDDIPATTI BOYS
BOTANY
1 PAUPARAPATTI GIRLS (BIOLOGY)
2 MORAPPUR GIRLS
3 KARIMANGALAM GIRLS
www.tnhspgtadharmapuri.blogspot.in
ZOOLOGY
1 PULIKARAI
2 MUKKAREDDIPATTI GIRLS
3 BOMMAHALLI (BIOLOGY
HISTORY
1.MARANDAHALLI GIRLS\
2.ADHIYAMANKOTTAI BOYS
3 MANGARAI
4 PALAYAMPUDUR
5 DHARMAPURI BOYS
6 BOMMAHALLI
PLITICAL SCIENCE
1.PAPPIREDDIPATTI BOYS
PHYSICAL DIRECTOR
1 B.MALLAPURAM BOYS
2 PENNAGARAM GIRLS
3 PAUPARAPATTI
www.tnhspgtadharmapuri.blogspot.in
18 August 2015
கலந்தாய்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் காலிப்பணி இடங்களை வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
2015-16ம் கல்வி ஆண்டிற்க்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22.8.2015ல் நடைபெற உள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அனைத்து காலிப்பணி இடங்களையும், கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு , ஒளிவு மறைவின்றி வெளிப்படையான கலந்தாய்வு நடத்த கேட்டு கொள்கிறோம்.
மனமொத்த மாறுதல் வழங்கும்போது உரிய விதிகளின்படி மாறுதல் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட தலைவர்.இ.பி.தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் ஆர். செல்வம், மாவட்ட பொருளாளர் ச.வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் .காவேரி , மாவட்ட அமைப்பு செயலாளர் கா. அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் ஆகியோர், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்தனர் .