புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

21 February 2015

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

 மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த வருடம் அறிவியல் எழுத்து தேர்வுக்கு வழக்கம் போல 75 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டுக்கு 5 மதிப்பெண்ணும் ஆகும். செய்முறை தேர்வுக்கு 20 மதிப்பெண்கள். அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல் மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மார்ச் 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிறகு மார்ச் 11-ந் தேதி முதல் 14-ந் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் செய்முறை தேர்வில் எந்த வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: