23 April 2015
இன்று உலக புத்தக தினம்
19 April 2015
16 April 2015
தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்:
பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள் பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது பாடம் தொடர்பான விளக்கங்களை எழுத்து வடிவில் கற்பிக்க வெள்ளை அல்லது கரும்பலகைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பிரித்தானியாவில் உள்ள East Anglia பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் Zoe Waller(31) என்பவர் இதில் சற்று வித்தியாசமானவர். மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு வெள்ளை அல்லது கரும்பலகை என எதையும் பயன்படுத்தாமல், தனது கையில் உள்ள தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி வருகிறார். வெள்ளை பலகையில் என்ன வரைய வேண்டுமோ அதை, ஒரு பென்சில் எடுத்து தனது கை தோலை கீறி படமாக வரைந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். பென்சில் அல்லது பிற கூர்மையான குச்சியை எடுத்து கை தோலில் கீறும்போது, அதே வடிவில் தோலில் வீக்கம் ஏற்பட்டு அது ஒரு வரைபடமாக மாறுகிறது. பேராசிரியர் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு அவரது தோலும் ஈடுகொடுத்து செயல்படுகிறது. இந்த செயலால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதற்கு ஒரே காரணம் அவருக்கு urticaria(அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி) என்ற வியாதி உள்ளது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டால், அவரது எந்த உறுப்பில் உள்ள தோல் மீது கீறினாலும் தடிப்புகள் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மறைந்து விடும். இது பற்றி பேராசிரியர் Zoe Waller கூறுகையில், இந்த அபூர்வமான அம்சம் எனது தோலில் இருப்பது எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதுடன், அவ்வாறு செய்யும்போது சிறிதளவு வலியும் ஏற்படாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான முறையில் பாடம் எடுப்பதால், இவரிடம் பாடம் பயில அதே துறையை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14 April 2015
கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி வழங்கப்பட்ட துண்டறிக்கை.
மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ், மாநில துணைத்தலைவர், சக்திவேல், நாமக்கல்மாவட்ட செயலர் ராமு, நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன், ஈரோடு மாவட்ட செயலர், திம்மராயன், கரூர் மாவட்ட மகளிரணி செயலர், உமா உள்ளிட்டோர் கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி துண்டறிக்கைகளை வழங்கினர்.
2 April 2015
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்பாட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைவர் E.P. தங்கவேல், தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் கழக பொருளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர் .
31 March 2015
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் விடுத்துள்ள அறிக்கை:மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளர் சஸ்பெண்டை கண்டித்து 1ம் தேதி ஆர்ப்பாட்டம் முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
30 March 2015
தருமபுரி ; தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்
29 March 2015
100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?
28 March 2015
26 March 2015
அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 28 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
சார்பில் 28 மாவட்டங்களில் 01.04.15 அன்று கண்டன ஆர்பாட்டம்
மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின்
அறிக்கை
தேர்வு அறைகளில் மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள் கண்டு பிடித்தால், அறை கண்காணிப்பாளர்கள்மீது
பணி இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15 அன்று மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
( R.செல்வம்)
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
பலிகடா ஆசிரியரா? நன்றி தினமணி 25.03.15
களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.
இவ்வாறான சூழல் உருவெடுத்தமைக்கு கல்வி வணிகமய
மானது மட்டுமன்றி, கல்வித் துறையும்கூட ஒரு முதன்மைக் காரணம் என்பதால், கல்வித் துறை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடுபடுகிறது.
உடனடியாக கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு என்னவென்றால், ஒரு தேர்வுக்கூடத்தில் ஒரு மாணவர் காப்பியடிப்பதை அந்த அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடிக்காமல் வேறு யாராவது கண்டுபிடித்தாலோ அல்லது பறக்கும்படை கண்டுபிடித்தாலோ அந்த அறையின் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது .
ஒரு மாணவன் காப்பியடிப்பதை அனுமதிக்கும் அறைக் கண்
காணிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.