புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

30 January 2015

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

               பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், 1992-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. 

               அதன் பிறகு, தேவைக்கேற்ப அந்தக் கொள்கை பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை அறிவுசார் வல்லரசாக உருவாக்கவும், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மனிதவள தேவையை நிறைவு செய்யவும், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பள்ளித் தாளாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. ஆலோசனைகளை அளிக்க விரும்பும் பொதுமக்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்கள் பங்கேற்கும் விவாதங்களில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் ஆலோசனைகளை www.mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகள், இந்த ஆண்டு முழுவதும் பெறப்படும். பள்ளித் தேர்வு முறையை மறுசீரமைப்பது, கிராமப்புற எழுத்தறிவு விகிதத்தை அதிகப்படுத்துவது, தொழில்கல்வி முறையை நிலைப்படுத்துவது, அறிவியல், கணிதப் பாடங்களை கற்பிப்பதில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவது, மொழிக் கல்வியை மேம்படுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீரமைப்பது, மாநில பல்கலைக்கழகங்களையும், இணையவழி கற்பித்தல் முறையையும் மேம்படுத்துவது, உயர் கல்வியில் தனியாரின் பங்களிப்பு,                                                             வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவது, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிவது உள்ளிட்ட 33 மையக் கருத்துகளின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கைக்கான பொதுமக்களின் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments: