புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

28 December 2014

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்: ராமதாஸ் கோரிக்கை

       மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
      இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் அதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
     ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களைவிட தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 4,800 குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. கேந்திரிய வித்யாலயம் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி அதிகம். மாநில அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி குறைவு என்பது தவறான வாதமாகும். கேந்திரிய வித்யாலயம் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கிறார்கள். தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கிறார்கள். அதனால், ஊதியம் குறைவு என்பதை ஏற்க முடியாது. தமிழை இதைவிட அவமதிக்க முடியாது.
     எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இதை உணர்ந்து மத்திய அரசுப் பள்ளி, இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments: