புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

29 December 2015

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்

1 . HOME SCHOOL MATHS.NET .
      தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;
2. MATHWAY.COM
    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.

23 December 2015

12th Bio - Zoology Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Bio - Botany Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Zoology Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Botany Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/ Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study materials for slow learners/Tamil medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for Slow learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for Slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

21 December 2015

தோல்வியின் அடையாளம் "தயக்கம்"  வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"...  துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

தோல்வியின் அடையாளம் "தயக்கம்" 
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... 
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

* வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, 
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது

* அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! 
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

* சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."

* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும், 
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும் 
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்... 
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்... 
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்.

19 December 2015

மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்  அவர்களின் செய்தி 
நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

       பள்ளிக்கு வருகை தரும் அதிகாரிகளில் முதுகலை ஆசிரியர்களை பாடம் சம்மந்தமாக கேள்வி கேட்கும் உரிமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அவருக்கு மேல் உள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமன முதுகலை ஆசிரியராக பணியாற்றி கூட பதவி உயர்வு பெற்றிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. எந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கும் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. இதனை ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அறிந்து கொண்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.
நமக்கென்ன என இருப்பதற்கு பொறுப்புகள் தேவையில்லை. பொறுப்பு என்று எங்கு வந்தாலும் மன அழுத்தம் இருக்கும். இதனை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் போதுதான் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வெற்றி பெற முடியும்.
தற்போது பணியேற்றிருக்கும் சில முதுகலை ஆசிரியர்களுக்கு தஙகள் பணிசார்ந்த நிகழ்வுகளில் உரிமையை விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
கட்செவியில் பல புரட்சிகரமான செய்திகளைக் கொண்டு வரும் நமது இளைய வரவுகள்,  அதிகாரிகள் என்றவுடன் நாம் 37 ஆண்களாக போராடிப் பெற்ற சுயமரியாதையை உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் அவ்வப்போது நெஞ்சிலே ஊசலாடுகிறது.
சில மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட எது நடந்தால் என்ன என நினைப்பதை போன்று உணர்கிறேன். நம்மிலே சில ஆசிரியர்கள் நம்மை ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அதிகார வர்க்கம் என்று வந்து விட்டால் கூனிக்குறுகி அடங்கி விடுவார்கள். இவ்வாறு உள்ளவர்கள் பாதிக்கப்படும் போது நாமே களத்தில் இறங்கி அவர்களையும் நமது பணித் தொகுதியின் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும். ஏதோ இதனை விளையாட்டாக மாவட்டப் பொறுப்பாளர்கள் கருதக் கூடாது. முதுகலை ஆசிரியர்களின் பணித் தொகுதியின் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே உள்ளது என்பதனை நெஞ்சிலே நிறுத்துங்கள்

வே.மணிவாசகன்
மாநில தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும்.
- ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.

இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.

ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது.

நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.

* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.

* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.

* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.

* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.

* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.

* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.

* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.

* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.

* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள்.

* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.

* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.

* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார்.

* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார்.

* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.

* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார்.

* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?
நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?