புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

31 May 2015

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.

இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக படிவம் "ச' இல் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.  ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய "ச' படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16ம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு இடர்பாடுகள், தேர்வுக் கோரிக்கைகள், சுயமரியாதை பாதிப்புகள் என எண்ணில் அடங்கா மன அழுத்தத்தில் நமது பணிகள் மட்டும் தொய்வில்லாமல் தொடர உள்ளன.முதுகலை ஆசிரியர்களை அச்சுறுத்தி தேர்ச்சி விழுக்காட்டை காரணம் காட்டி வேலை வாங்கும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப் படுவதில்லை. நமது குறைகளில் இம்மி அளவு கூட சரிசெய்யப்படாமல் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தக் கல்வி ஆண்டிலாவது நமது இடர்பாடுகள் களையப்படுமா? என்ற ஏக்கத்தில் உங்களோடு ஒருவனாக இருந்து உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அனைத்து முதுகலை ஆசிரியர்களும் வழக்கு நிதியை மனமுவந்து தாருங்கள். உங்களால் வழங்கப்படும் நிதி வழக்கிற்காக மட்டுமே பயன்படுத்துவோம். முதுகலை ஆசிரியர்களுக்காக பணி செய்யா விட்டாலும் நமது இயக்கத்தின் மூலம் எதுவும் நடந்து விடக் கூடாது என 1980 முதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.மடியும் போது மடிவோம் என்று வாழ்வை வீணாய்ப் போக்காமல், மடிவது நல்ல குறிக்கோட்காயின் மண்ணில் இறந்தும் பெற்று விடு என்பது போல், நமது இயக்கப் பயணம் தொய்வில்லாமல் தொடர அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.

மணிவாசகன்
மாநில தலைவர்

26 May 2015

கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை. அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும், எதிர்நோக்குவதும் தவறானவை. எல்லோருக்குமான இலவச, கட்டாய, சமச்சீர் பொதுக் கல்வி முறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியம். போதிய கட்டடம், காற்றோட்டமிக்க வகுப்பறை, துடிப்பு மிகுந்த மாணவர்கள், குறைபாடிருப்பினும் காண்போர் கவனத்தை ஈர்க்கும் பாட நூல்கள், சிறந்த கற்றல் - கற்பித்தல் கருவிகள், நல்ல சூழல் அனைத்தும் இருந்தும் என்ன பயன்? தகுதியும், திறமையும் ஒருங்கே நிறைந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியேற்ற ஆசிரியர்களை அரசே பணிபுரிய விடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? கல்வித் துறை சாராத பிற துறைகளில் பணிபுரிவோருக்கு அவரவர் சார்ந்த துறைகளில் மட்டுமே முழுக் கவனமும் துறைசார் வேலைகளும் இருக்கும். அதேசமயம், ஏழை, எளிய குழந்தைகளைக் கடைத்தேற்றும் தலையாயப் பணிபுரிந்திடும் ஆசிரியச் சமூகத்தினருக்குப் பிற துறையினர் தரும் நெருக்குதல்கள் சொல்லி மாளாதவை. புள்ளியியல் துறை சார்ந்த பொருளாதாரம், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்ந்த ஜாதிச் சான்று உள்ளிட்ட மூவகைச் சான்றுகளுக்கான முன்னேற்பாடுகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்துதல், வாக்கு எண்ணிக்கை, பள்ளிக் கட்டடம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், சுற்றுச்சுவர், பராமரிப்புப் பணிகள், பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி, மேஜை முதலான பொருள்கள் வாங்குதல், பாதுகாத்தல் மட்டுமன்றி இவை குறித்த பதிவேடுகளையும், ரசீதுகளையும் முறையாகப் பராமரித்து பல்வேறு உள்ளூர், வெளியூர் தணிக்கைகளுக்குத் தக்க ஒத்துழைப்பு வழங்குதல் என்பவை தக்கச் சான்றுகளாகும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், ஆதிதிராவிடர், மாற்றுத் திறனாளிகள், பீடித் தொழிலாளர்கள், மனிதக் கழிவைச் சுத்தம் செய்வோரின் குழந்தைகள் ஆகியோரின் நலத் துறை சார்ந்த உதவித் தொகைகள், நலத் திட்டங்கள் முதலானவற்றை முறையாகப் பெற்று உரியவர்களிடம் சேர்ப்பித்தலும் ஆசிரியரின் கூடுதல் வேலைகளாகும். இவையனைத்தும் ஒழுங்காக ஈடேறிட அஞ்சலகங்கள், வங்கிகளில் பெற்றோர் அல்லது மாணவர் பெயரில் கணக்குத் தொடங்கித் தருவதும் அந்தப் புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதும் முக்கியமானவை. அஞ்சல் துறை சார்ந்த வளரும் மாணவர் சேமிப்புத் திட்டம், சிறுசேமிப்பு ஆகியவற்றைத் திறம்பட, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களிடம் இயக்கமாகக் கொண்டு சென்று சேமிப்புப் பழக்கத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தல் மிகுந்த சிரமம் தரும் பணியாகும். மின் கட்டணம், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, டி.வி.டி. சாதனம் முதலிய நவீன கற்றல், கற்பித்தலுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதுநீக்கம், பள்ளிச் சிறார் நலத் திட்டம் சார்பில் பயனாளர் அட்டை எழுதுதல், பதிவேடு பராமரிப்பு வேண்டும். தவிர, அயோடின் சத்துக் குறைபாடு கண்டறிதல், பார்வைக் குறைபாடு கண்டறிதல், குறைநிவர்த்திக் கண்ணாடி பெற்று வழங்குதல், பதின்பருவச் சிறுமிகளுக்கு மாதவிடாய் கால நவீன பாதுகாப்பு உபகரணம் அளித்தல், சத்துணவு மேற்பார்வை, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், இலவசப் பேருந்துப் பயண அட்டை பெற்றுத் தருதல் உள்ளிட்ட வேலைகளும் அடக்கம். ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் பள்ளிப் பிள்ளைகளுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், எழுது பொருள்கள், கணித உபகரணங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை அனைவருக்கும் சரியாகப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பது ஆசிரியர்களுக்கு இலகுவான வேலையல்ல. உயர் அலுவலர்களால் கோரப்படும் பல்வேறு புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தித் தயாரித்துக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்கு உலக ஆசைகள் அற்றுவிடும் எனலாம். தவிர, ஆசிரியர்கள் பலரைக் கல்வி அலுவலர்கள் தத்தம் எடுபிடிகளாகவும், வாகன ஓட்டிகளாகவும் உருமாற்றி வைத்துள்ள போக்குகள் களையப்பட வேண்டியவை. ஆசிரியர்களின் நிலை இப்படி இருக்கையில், ஒவ்வோர் ஊதியக் குழுவிலும் பரிந்துரைத்ததற்கு மாறாக நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய ஊதியத்தை வழங்க மறுப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசு ஆசிரியரின் ஊதியத்தைவிட மாநில அரசு ஆசிரியரின் ஊதியம் குறைவாகும். ஊதிய முரண்பாடுகள் காலத்தில் களையப் பெற்று நிவர்த்தி செய்வது அரசின் தலையாயப் பணியாகும். பகுதிநேரப் பணியாக அல்லாமல் முழு நேரமும் ஆசிரியப் பணி மட்டுமே செய்தால்தான் இளைய சமுதாயம் நலம் பெறும்.

22 May 2015

NEW Health Insurance ID Card பதிவிறக்கம் செய்வது எப்படி?

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.

20 May 2015

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரையின்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

15 May 2015

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார். கல்வி அதிகாரிகள் கூட்டம் வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

14 May 2015

திண்டுக்கல் மாவட்டம் - பாராட்டு விழா, மாநில பொது செயலாளர் பிரபாகரன் பங்கேற்பு

பதவி உயர்வு , பணி நிறைவு, நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு திண்டுகல்மாவட்ட தலைவர் சலேத் ராஜா  தலைமையில் நடை பெற்றது . மாநில பொது செயலாளர் பிரபாகரன்,  மாநில துணைத் தலைவர் சக்திவேல்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

13 May 2015

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு

பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 May 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் அபார சாதனை

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 97 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதினர். இதில் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.அபிமன்னன் 1148 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் ஜாலிபுதூர் பள்ளி மாணவி தி.தீபிகா 1145 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும் ஏலகிரி பள்ளி மாணவர் பி.அருள் 1136 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

11 May 2015

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில்,செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு

 இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்தியஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.இதில் தேர்வான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டில்லியில் நடந்தது.இந்த கருத்தரங்கில் பங்கேற்ற, செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திலிப், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றக தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி, திலிப்குமார் உள்ளிட்ட 13 இந்தியர்கள் மற்றும் 87 நாடுகளை சேர்ந்த, 300 பேர் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

        பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
          பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும், 90.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளை விட, 6 சதவீதம் குறைவாக, 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டில், 2,700 பள்ளிகள் உள்ளன. 3 லட்சத்து, 44 ஆயிரத்து, 189 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

முக்கிய தினங்களின் விவரம்.

ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

8 May 2015

திருமணம் ஆகியிருந்தாலும் மரணம் அடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு வேலை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

6 May 2015

மறுகூட்டலுக்கு மே 8முதல் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.

*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.

*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது.

பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

3 May 2015

தருமபுரி பிரசார செயலாளர் சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு மாநில தலைவர் மணிவாசகன் அவர்களின் திருமண வாழ்த்து


திருமண வாழ்த்து 
தருமபுரி பிரசார செயலாளர்  சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு 
மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர்  மாவட்ட தலைவர், கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  திருமண வாழ்த்து  தெரிவித்தனர் 



புதுமனை புகு விழா கொண்டாடிய மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு மாநில தலைவர் வாழ்த்து

புதுமனை புகு விழா கொண்டாடிய  மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு  மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர் E.P.தங்கவேல்,  கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்தனர் .



30 April 2015

3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.


முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Pay order for the month of apr-2015

29 April 2015

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்- அகம்/புற தேர்வர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர் செயல் முறைகள்


 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்-
அகம்/புற தேர்வர்கள்,  தமிழ் மற்றும் ஆங்கிலம்  பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர்  ஆணை

2011-12 Upgraded Schools Pay continuation Order upto 1.12.2015

26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையில் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.