புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

12 May 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் அபார சாதனை

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 97 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதினர். இதில் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.அபிமன்னன் 1148 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் ஜாலிபுதூர் பள்ளி மாணவி தி.தீபிகா 1145 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும் ஏலகிரி பள்ளி மாணவர் பி.அருள் 1136 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

முதலிடம் பெற்ற அபிமன்னன் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 194, ஆங்கிலம் 180, பொருளியல் 179, வணிகவியல் 199, கணக்குப் பதிவியல் 200, கணினி அறிவியல் 196.
தந்தை அர்ச்சுனன் இறந்துவிட்டார். தாய் நஞ்சம்மாள். ஆடிட்டராகப் போவதாக அபிமன்னன் தெரிவித்தார்.
இரண்டாமிடம் பெற்ற தி.தீபிகாவின் தந்தை தியாகராஜன் கூலி வேலையும், தாய் ராணி டெய்லராகவும் உள்ளனர். மதிப்பெண்கள்: தமிழ் 191, ஆங்கிலம் 171, இயற்பியல் 191, வேதியியல் 198, உயிரியல் 194, கணிதம் 200. வருங்காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றப் போவதாக தெரிவித்தார்.
மூன்றாமிடம் பெற்ற மாணவர் பி.அருளின் தந்தை பெருமாள் லாரி ஓட்டுநர். பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 184, ஆங்கிலம் 169, இயற்பியல் 195, வேதியியல் 199, உயிரியல் 189, கணிதம் 200. வருங்காலத்தில் மருத்துவராகப் போவதாகத் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவர்கள்: இலக்கியம்பட்டி அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் வெறும் 8 சதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய 30 பேரில் 14 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 47 சதமாக அதிகரித்துள்ளது.
சிறார் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்: பாலக்கோட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலில் சிறார் தொழிலாளராக ஈடுபட்டிருந்த வி.கார்த்திக் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டார். தந்தை வேலு தள்ளுவண்டி வியாபாரம் செய்து வருகிறார். தாய் உமாமகேஸ்வரி.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இம்மாணவர் தேசிய சிறார் தொழிலாளர் மீட்புத் திட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பிளஸ் 2 தேர்வில் 1156 மதிப்பெண்களை வி.கார்த்திக் பெற்றுள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 185, ஆங்கிலம் 188, கணிதம் 200, இயற்பியல் 195, வேதியியல் 195, உயிரியல் 194. வருங்காலத்தில் இருதயவியல் மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்வதே லட்சியம் என்றார் வி.கார்த்திக்.
100 சதத் தேர்ச்சி: மாவட்டத்தில் 97 அரசுப் பள்ளிகளில் இருந்து 13,891 மாணவ, மாணவியர் தேர்வெழுதிய நிலையில் 5,997 மாணவர்கள், 6,416 மாணவியர் என 12,413 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.46 சதமும், மாணவியர் தேர்ச்சி விகிதம் 91.8 சதமாகும்.
பென்னாகரம் அருகே சின்னம்பபள்ளி மாதிரிப் பள்ளி, காரிமங்கலம் மாதிரிப் பள்ளி, இருமத்தூர் ஆகிய 3 அரசுப் பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆர்.கோபிநாதம்பட்டி அரசுப் பள்ளி 99சதத் தேர்ச்சி பெற்றுள்ளது. 

No comments: