புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

23 January 2017

TNHSPGTA State General Body meeting Held in Thanjavur on 22.1.17 at St.Antony's HSS

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொதுக்குழுகூட்டம

           22.01.2017 அன்று வீரம் பொருந்திய தஞ்சை மண்ணில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப்பொதுக்குழு, மாநிலத் தலைவர் முனைவர் *திரு.வே. மணிவாசகன்*  

 நடைபெற்றது.மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.💐


அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா.பிரபாகரன் அவர்கள் 20 தீர்மானங்கள் வாசிக்க, அத்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன. 



 அப்பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் மாநில, மாவட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


 💐மேலும்  நமது தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம்,  மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலாளர் T.செல்வம், மாவட்ட பொருளாளர்,  சுப்பிரமணி மற்றும்  மாவட்டப்  செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டோம். .💐


அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் அரசு பொதுத் தேர்வுப் பணி உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரி 

⚫⚫⚫⚫

இரண்டு கட்ட 

போராட்டங்கள்

 ⚫⚫⚫


1. துறை அலுவலர்,பறக்கும் படை அலுவலர் கூட்டங்கள்  புறக்கணிப்பு செய்வது.


 2. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முழு மனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்  கொள்கிறோம்.

 அதனை வெற்றியடைய செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதால் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து போராட்டம் வெற்றியடையச் செய்ய  வேண்டுகிறோம். மாநில பொதுக்குழுவை மிகச்சிறப்பான முறையில்  அனைத்து விதத்திலும் பாராட்டும் விதத்தில் நடத்திய தஞ்சை மாவட்டத் தலைவர் ,மாவட்ட தலைவர்,குமார் மாவட்ட செயலாளர் கோபிசந்தர் மற்றும் பொறுப்பாளர்கள், அம்மாவட்ட முதுகலை ஆசிரிய நண்பர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த  அனைவருக்கும்  மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐


 ஜி.ஆரோக்கியம்

மாவட்ட செய்தி தொடர்பாளர்,   தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், 

தருமபுரி மாவட்டம்.*


மாநில பொதுக்குழு தீர்மானங்கள

21 December 2016

இன்று ( 21.12.16) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்க்குழுக் கூட்டம்( TNHSPGTA)

(21.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி மாவட்டமான கும்பகோணம் நகர  மேல்நிலைப்பள்ளியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக கும்பகோணம் கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20 December 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட  மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.
இன்று(20.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி  மாவட்டமான பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

27 November 2016

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்.

                                       தஞ்சை மாவட்டத்தில்  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA)  அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாநில தலைவர்  திரு.வே.மணிவாசகன்.                            ---------------------------                                                                                                           தஞ்சாவூர் மாவட்டதலைவர்,     
திரு.  M.குமார் 
மாவட்டசெயலர்,          திரு.வெ.கோபிசந்தர்
மாவட்ட பொருளாளர், திரு.S. கார்மேகம், தலைமையிடத்து செயலர்,  G.மாரிமுத்து & P.செல்வராஜ்
மாவட்ட ஆலோசகர்கள்,  வி.பன்னீர்செல்வம் & D.சேதுராமன்
மாவட்ட சட்ட செயலர், S. ராஜன்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்கள்:                  K.பிரதீப் 
R.ஜெகதீசன்
N.செந்தில் குமார் மற்றும் பலர் இன்றைய சிறப்புமிகு தஞ்சாவூர்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்
     
                   மாநில, மாவட்ட 
                    --------------------------
பொறுப்பாளர்களின் வாழ்த்து
---------------------------------------------------
புதிய தஞ்சை மாவட்டக்கழகம் உருவாகிட உந்து சக்தியாக இருந்திட்ட நம் மாநிலத்தலைவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா. பிரபாகரன். 
மாநிலப் பொ

----------------------------------------------------
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கு www.tnhspgtadharmapuri.blogspot.in சார்பாக வாழ்த்துக்கள்
email address: tnhspgtadpuri@gmail.com
தொகுப்பு  ஆரோக்கியம் தருமபுரி
-------------------------------------------------------

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைப்பை மீண்டும்  மீட்டெடுத்த மாநிலத்தலைவர் அவர்களுக்கும் பிரச்சார செயலாளர்  ரா.செல்வம் 
மாநில செய்தி தொடர்பாளர்

மாநிலத் தலைவர் அவர்களுக்கும்  வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.

சீனிவாசன்
மாநில சட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி

மாநிலத்தலைவா் அவா்களுக்கும,வாழ்த்துக்கள்
ச.சேகா், 
மாநில துனணத்தலைவா் தருமபுாி.

நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! வளர்க தஞ்சை மாவட்டத்திலும் நம் தலைவர் புகழ் ,,,,  
க.காவேரி                         
மாவட்டச் செயலாளர் ,    TNHSPGTA , தருமபுரி,

தரணிபோற்றும் தஞ்சையில் இயக்கத்தின் வளர்ச்சியை மீட்க கிரியா ஊக்கியாக செயல்பட்ட போர்ப்படை தளபதி மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கும் TNHSPGTA ன் தர்மபுரி மாவட்ட அமைப்பு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறொம்.

25 November 2016

அறிவோம் அரசாணைகள்


-------------------------------------------                  அறிவோம் அரசாணைகள்
--------------------------------------------
தருமபுரி TNHSPGTA.                 www.tnhspgtadharmapuri.blogspot.in
*1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?*
அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

TNHSPGTA Pudugai: இன்று(24-11-2016)புதுகை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மே.நி.பள்ளியில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

கூட்ட. நிகழ்வின் சில பதிவுகள்.....

பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை: மண்டல அலுவலர்!!

''மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத (நான் இ.சி.ஆர்.,) பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

19 November 2016

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

12 November 2016

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) முப்பெறும்விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16)  முப்பெறும்விழா நடைபெற்றது. 

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.  இன்று காலை  கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது... நான் மார்ச் 2006-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றேன்.
பொறுப்பேற்றதிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று வருகிறேன்... ஆனால், இன்று நடந்த ஐம்பெரும் விழா மிக மிக பாராட்டுக்குரியது....
இதனை செவ்வனே நடத்தி முடித்த மாநில சட்டத்துறைச் செயலர் சீனுவாசன், மாவட்டத் தலைவர் அலக்ஸாண்டர், மாவட்டச் செயலர் கோபி, பொருளர் சத்தியமூர்த்தி , அமைப்புச் செயலர் குபேந்திரன், மகளிரணிச் செயலர் திருமதி ரம்யா, தலைமையிடச் செயலர் வடிவேல், செய்தித் தொடர்பாளர் பச்சைமுத்து மற்றும் அனைத்து மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்....
160-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டார்கள்... கலந்து கொண்டவர்களில் 75% 2009-க்குப் பிறகு பணியேற்றவர்கள்.... இதனைப் போல் மற்ற மாவட்டங்களும் செயலாற்ற கேட்டுக் கொள்கிறேன். மணிவாசகன்.

3 November 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகள்

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி   முதுநிலைப்பட்டதாரி  ஆசிரியர் கழகம்  (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகளும், அவைகளின் தற்போதைய நிலையும்

25 October 2016

தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் சந்திப்பு

TNHSPGTA DHARMAPURI

முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களுடன் சந்திப்பு
  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில்,
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில்
தருமபுரி  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை (17.10.2016)  திங்கட்கிழமை மாலை  சந்தித்தனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு.கா.காவேரி,
மாவட்ட பொருளாளர் திரு.சுப்பிரமணியன்,
மாவட்ட துணைத் தலைவர் திரு.நாகேந்திரன்
ஆகியோர்  முதன்மைக்கல்வி அலுவலர்  திருமதி.மகேஸ்வரி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மாநில செய்தி தொடர்பாளர் திரு. ரா.செல்வம், மாநில துணைத்தலைவர் திரு.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
✅தற்போது முதுகலை ஆசிரியர்களில் பலர்,  பகுதி நேரத்தில்  எம்ஃபில் (M.Phil) உயர்க்கல்வி  படிக்க விரும்புகின்றனர். 
உயர்க்கல்வி  பயில  அனுமதி, 
பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் மற்றும் தேர்வுநிலை உள்ளிட்ட ஆணைகளை சிறப்பு முகாம்  நடத்தி வழங்க முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஜி.ஆரோக்கியம்,
மாவட்டசெய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA),
தருமபுரி மாவட்டம்

11 October 2016

06.10.2016.தருமபுரி மாவட்ட (TNHSPGTA) செயற்க்குழுக்கூட்டம். மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

06.10.2016.
--------------------------------------------
தருமபுரி மாவட்ட (TNHSPGTA)
---------------------------------------------- செயற்க்குழுக்கூட்டம்.
--------------------------------------
     TNHSPGTA ன்  மாவட்ட செயற்க்குழுக்கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாலை ( 06.10.2016)   7.00 மணி அளவில் சிறப்பாக  நடைபெற்றது.
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புதிய மாவட்ட பொறுப்பாளர்
-------------------------------------------------
  தேர்வு
--------------
1. அதிமான்கோட்டை (ஆ) பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியரும், மாவட்ட துணைத்தலைவருமான திரு.காவேரி அவர்கள் புதிய மாவட்ட செயலாளராகவும்,
2. பி.அக்ரஹாரம், வணிகவியல் முதுகலை ஆசிரியர்,  திரு.சுப்பிரமணியன்  அவர்கள்  மாவட்ட பொருளாளராகவும்,
3. நத்தமேடு, விலங்கியல்  முதுகலை ஆசிரியரும்,  பாப்பிரெட்டிபட்டி வட்டார இணைச்செயலாளருமான திரு.நாகேந்திரன் அவர்கள் மாவட்ட துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அவர்களின் பணி சிறக்க கூட்டத்தில் வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து 
பதவி உயர்வில் தலைமையாசிரியராக சென்றுள்ள திரு.அப்துல் அஜீஸ் அவர்களுக்கும்,
மாவட்ட பொருளாளராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.வையாபுரி அவர்களுக்கும்,
மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.சம்பத்குமார் அவர்களுக்கும்,  அவர்களின் சங்க பணிக்காக பாராட்டப்பட்டார்கள்.
அதுசமயம் மேலும்    மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி!   நன்றி!!  நன்றி!!
ஜி.ஆரோக்கியம்
மாவட்ட. செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
தருமபுரி மாவட்டம்.