புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

23 February 2015

DHARMAPURI DISTRICT JACTTO MEETING ON 22.02.2015















                               
                                     
                                                   


                               
                                      
                                   

                                     

                     
                                      
                                   
                                      


                                       


                                   
                                   







































































தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கோரிக்கைககள் (JACTTO )






 







22 February 2015

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

 அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர். தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியே மருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான :ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு ,

உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது. ஊக்க ஊதியம்: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால்

பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்: ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்:

 பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை:

உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!

அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!

21 February 2015

தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 2011க்கு பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது. தகுதித்தேர்வு சான்றுகளின் உண்மைத் தன்மை தேவை எனக் கூறி பள்ளி நிர்வாகங்கள் மறுப்பதால் அதற்கான சான்றை பெற சி.இ.ஒ., மற்றும் சென்னை டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அலைவதாக புகார் கூறுகின்றனர்.

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு கண்காணிப்பு கேமரா

 பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் கூறினார்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

 மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

20 February 2015

தேர்வு பணிகளுக்கான கையேடு மார்ச் - 2015

PAY ORDER FOR UPGRADED SCHOOL DURING 2010-11

இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

           ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.பணிமூப்பு அடிப்படையில்மாவட்ட வாரியாக, காலி பணியிட பட்டியல் சேகரிக்கப்பட்டு, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பணியிட மாறுதல் செய்து, உத்தரவு வழங்க வேண்டும்.எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, கடந்த கல்வி ஆண்டில், கலந்தாய்வு, 'கலவரமாக' மாறியது. 'ஆன் - லைன்' வழியில் கலந்தாய்வை நடத்தியதும், முக்கிய நகரங்கள், நகரங்களை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள இடங்கள் மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா?

அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா? 
         அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நாள்.20.1.1997ன்படி அரசுப்பணியாளரின் மனைவி கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொள்ளும்போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச்சான்றின் அடிப்படையில் 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.

19 February 2015

2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

           தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

17 February 2015

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?


தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு
உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்துமா ?

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு உண்மை நிலவரம் 2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???

14 February 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் - தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள்

         மாநில பொறுப்பாளர்கள் 
1. R. செல்வம், மாநில செய்தி தொடர்பாளர், அதிகாரப்பட்டி 
2. S. சேகர், மாநில துணைத்தலைவர் , கடகத்தூர் 
3. T. செல்வம், மண்டல செயலர், அரூர் (ம)
       மாவட்ட பொறுப்பாளர்கள் 
1   E.P. தங்கவேல்,  மாவட்டத் தலைவர், தருமபுரி (ஆ)
2.  J. அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், காளிப்பேட்டை
3.  S. வையாபுரி,  மாவட்ட பொருளாளர்,   B.அக்ராஹரம்
4.  K. அருண்குமார்,  மாவட்ட  அமைப்பு  செயலாளர்,  இலக்கியம்பட்டி(ஆ)
5. S.ஞானசிகாமணி, மாவட்ட மகளிரணி செயலாளர், அதியமான்கோட்டை(ஆ)
6.  M. முருகன்,  மாவட்ட  தலைமையிட  செயலாளர்,  தருமபுரி (ஆ)
7.  G. ஆரோக்கியம்,  மாவட்ட  செய்தி தொடர்பாளர் , ஆர்.கோபிநாதம்பட்டி
8.  M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  பென்னாகரம். (ம)     
9.  G .ராஜா, மாவட்ட  தணிக்கையாளர் ,  பாளையம்புதூர்
10. மா .சிவராமகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர், பாப்பாரப்பட்டி (ஆ )
11. க .காவேரி, மாவட்டத் துணைத் தலைவர், அதியமான்கோட்டை(ஆ )
12. P.வினோத், மாவட்ட இணைச்செயலர், அரூர்(ம)
13. S.M.தௌலத் பாஷா,  மாவட்ட இணைச்செயலர், பண்டஅள்ளி 
14. T. விஜியா  மாவட்ட   மகளிரணி  இணைச்செயலர், நல்லம்பள்ளி
15. S.மல்லிகா,  மாவட்ட   மகளிரணி  இணைச்செயலர்,  தருமபுரி(பெ )
16. மு.தமிழ்வாணன்,  கல்வி மாவட்ட  தலைவர், இண்டூர்
17. K.M.சிவபாரதி, கல்வி மாவட்ட துணைத் தலைவர், கன்னிபட்டி
18. P.ராஜசேகர், கல்வி  மாவட்டச் செயலர், மாட்லாம்பட்டி
19. M.ஜேம்ஸ் ராஜா, கல்வி  மாவட்ட  இணைச்செயலர், புலிகரை
20. C.ராஜசேகர் கல்வி  மாவட்ட இணைச்செயலர். பாலக்கோடு (ஆ) 
21. கா.பாபு சுந்தரம் .மாநில செயற்குழு உறுப்பினர் , பாலக்கோடு (ஆ)
22. க.சம்பத்குமார் ,  மாநில செயற்குழு உறுப்பினர், ஏலகிரி

24. இரா .மாதேசன், மாநில செயற்குழு உறுப்பினர், காரிமங்கலம்(ம )
25.  த. சிங்காரவேலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ,பி.ஆக்ராஹரம்
26.  C. ஞானசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்,  தருமபுரி (ம )
27.  C. ஆனந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர், பி.மல்லாபுரம் 
28.  C. பச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி                                           29.  C. கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி 
30.  M. சக்திவேல் , மாநில பொதுக்குழு உறுப்பினர், அளே தருமபுரி 
31.  பா .இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர், பந்தாரஅள்ளி 
32.  சி. சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், G.T.R. வாச்சாத்தி 
33.  K. சிவப்ரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், இண்டூர் 
34.  S. ரவிச்சந்திரன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஏலகிரி 
35.  வை. பூபதி  , மாவட்ட செயற்குழு உறுப்பினர், தருமபுரி(ஆ)
36.  மு .சுரேஷ் , நகர தலைவர்,தருமபுரி நகரம், தருமபுரி (ம )
37.  K .பெரியசாமி  , நகர செயலர், தருமபுரி நகரம் , அளே தருமபுரி 
38.  D .சுதா, கல்வி மாவட்ட மகளிரணி செயலர்,கோணங்கி நாய்க்கன அள்ளி 
39.  M .மகாராஜன் ,  ஏலகிரி
           
வட்டார பொறுப்பாளர்கள் 
தருமபுரி  வட்டம் 

1.செ.கிருஷ்ணமூர்த்தி ,  வட்டாரத்தலைவர், தருமபுரி  (ஆ ) 
2 G.அண்ணாதுரை , வட்டாரத்துணைத்தலைவர், பாளையம்புதூர் 
3. ரா .காமராசு, வட்டார செயலர்,  கிருஷ்ணாபுரம் 
4. Jஆனந்தன், வட்டார  இணைச் செயலர், தருமபுரி (ம )
5.ம.வசந்தா,  மகளிரணி செயலர், அதியமான்கோட்டை  (ஆ) 
            
பென்னாகரம்   வட்டம் 

1.C.பாலாஜி ,  வட்டாரத்தலைவர், பென்னாகரம் (ம) 
2.K.சுரேஷ் , வட்டாரத்துணைத்தலைவர், பென்னாகரம் (ஆ) 
3. J.லோகநாதன், வட்டார செயலர்,  செல்லமுடி 
4. சித்தன் , வட்டார  இணைச் செயலர், ஏரியூர் 
5.வி .கவிதா ,  மகளிரணி செயலர், பாப்பாரப்பட்டி   (ம) 
  பாலக்கோடு  வட்டம் 

1. மா.சேவியர், வட்டாரத்தலைவர், பாலக்கோடு (ம) 
2.R.மூர்த்தி, வட்டாரத் துணைத்தலைவர், பாலக்கோடு (ம) 
3.அறிவுடைநம்பி, வட்டார செயலர்,  பஞ்சப்பள்ளி 
4.மாதேஷ் வட்டார  இணைச் செயலர், பேகார ஹள்ளி 
5. சுதா. மகளிரணி செயலர் ,பாலக்கோடு (ஆ) 

  அரூர்   வட்டம் 

1. P.ராஜேந்திரன் , வட்டாரத்தலைவர், அரூர்  (ஆ ) 
2 பா.பாவஷா , வட்டாரத் துணைத்தலைவர், அரூர்  (ஆ ) 

4. R.கோவிந்தராஜ்  வட்டார  இணைச் செயலர், வேப்பம்பட்டி 
5.Cராதிகா  . மகளிரணி செயலர், அரூர்  (ஆ ) 

 பாப்பிரெட்டிபட்டி   வட்டம் 

1.Rசம்பத்,  வட்டாரத்தலைவர், பாப்பிரெட்டிபட்டி (ஆ ) 
2 R.சம்பத், வட்டாரத் துணைத்தலைவர், காளிபேட்டை 
3.M.சென்னைக்கிருஷ்ணன் , வட்டார செயலர்,  ஜாலிப்புதூர் 
4. R.நாகேந்திரன் , வட்டார  இணைச் செயலர், நத்தமேடு 
5. D.ரேவதி . மகளிரணி செயலர் ,சொலைகொட்டாய் 












பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண் டும் என கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண் டும் என கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
        கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் இரா. ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் மா. சக்திவேல், அமைப்புச் செயலர் வி.டி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ. தீனதயாளன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் உழைப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 2004 - 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ச. உமா நன்றி கூறினார்.