புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

12 February 2015

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு

பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

           கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை: 104-இல் அழைக்கலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.

                  தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

10 February 2015

பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


          பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 31 வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10 வரையிலும் நடைபெறுகின்றன. இப்போது பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வுக்கான பல்வேறு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்து வருகிறது.




          இந்த நிலையில், தேர்வுகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகளுக்கு மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

9 February 2015

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: என்.சி.டி.இ. தலைவர்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட்.  (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார். 

"ஆசிரியர்களே மாணவர்களின் சிறந்த வழிகாட்டி:உலகில் சிறப்புடன் வாழ கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் தான் : மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

கரூரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கை என்பதையும்,சமுதாயத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதையும் உணர்த்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.

8 February 2015

08.02.15 அன்று தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம்


தலைமை மாவட்டத் தலைவர் திரு . E.P. தங்கவேல் 
சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல், மாநில துணைத் தலைவர், கரூர்
தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஈ.ப.தங்கவேல் தலைமை வகித்தார். செயலர் ஐ.அப்துல் ஜீஸ் முன்னிலை வகித்தார். தீர்மானங்கள் குறித்து மாநில துணைத் தலைவர் சக்திவேல் பேசினார்.
கடந்த 2003-04-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் முறைப்படுத்த வேண்டும். 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தை மாற்றம் செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். திருச்சியில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உழைப்பூதியம் உயர்த்தித் தரப்படாத நிலையில், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள கருத்தியல் பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளர் ச.வையாபுரி வரவேற்றார். செய்தித் தொடர்பாளர் ஆரோக்கியம்  நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொண்டவர்கள்  
தி.செல்வம்  மண்டல செயலர் அரூர் (ம)  
  J.அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், காளிப்பேட்டை 
  S.வையாபுரி,  மாவட்ட பொருளாளர், அரசு   மே.நி.ப.   B.அக்கரஹரம்
 K.அருண்குமார்,  மாவட்ட  அமைப்பு  செயலாளர்,  இலக்கியம்பட்டி(ஆ)
 M.முருகன் ,  மாவட்ட  தலைமையிட  செயலாளர்,  தருமபுரி (ஆ)
G.ஆரோக்கியம்,  மாவட்ட  செய்தி தொடர்பாளர் , ஆர்.கோபிநாதம்பட்டி
M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  பென்னாகரம். (ம)     
G .ராஜா, மாவட்ட  தனிக்கையாளர் ,  பாளையம்புதூர்
கா .காவேரி, மாவட்டத் துணைத் தலைவர், அதியமான்கோட்டை(ஆ  M.ஜேம்ஸ் ராஜா, கல்வி  மாவட்டச் இணைச்செயலர், புலிகரை
கா.பாபு சுந்தரம் .மாநில செயற்குழு உறுப்பினர் ,பாலக்கோடு (ஆ)  க.சம்பத்குமார் ,  மாநில செயற்குழு உறுப்பினர், ஏலகிரி
 S.M.தௌத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்,பண்டஹள்ளி
 C.பச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி                                          
 சி.சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், G.T.R. வச்சாச்சி 
மு .சுரேஷ் , நகர தலைவர்,தருமபுரி நகரம், தருமபுரி (ம )
 K .பெரியசாமி  , நகர செயலர், தருமபுரி நகரம் , அளே தருமபுரி 
தங்ககுமார், பண்டஹல்லி, திருநாவுகரசு ,தொங்கநூர் , மா.வெள்ளிங்கிரி , மெனசி,, கதிரவன், பி.துறின்ஜிபட்டி,நந்திவர்மன், இண்டூர், கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி (ஆ), கா.சக்திவேல். ஒடசல்பட்டி, மு.சக்திவேல் ஒடசல்பட்டி ,பாலன் , அனுமந்தபுரம், காமராஜ் ,கிரிஷ்னாபுரம், ஜி .அண்ணாதுரை ,பாளையம்புதூர் , எம்.சக்திவேல், கடத்தூர் (ஆ) ,காசிநாதன்,  அரூர் (ம) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .