புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

30 April 2015

3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.


முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Pay order for the month of apr-2015

29 April 2015

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்- அகம்/புற தேர்வர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர் செயல் முறைகள்


 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்-
அகம்/புற தேர்வர்கள்,  தமிழ் மற்றும் ஆங்கிலம்  பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர்  ஆணை

2011-12 Upgraded Schools Pay continuation Order upto 1.12.2015

26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையில் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



23 April 2015

இன்று உலக புத்தக தினம்

பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

16 April 2015

தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்:

பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள் பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது பாடம் தொடர்பான விளக்கங்களை எழுத்து வடிவில் கற்பிக்க வெள்ளை அல்லது கரும்பலகைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பிரித்தானியாவில் உள்ள East Anglia பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் Zoe Waller(31) என்பவர் இதில் சற்று வித்தியாசமானவர். மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு வெள்ளை அல்லது கரும்பலகை என எதையும் பயன்படுத்தாமல், தனது கையில் உள்ள தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி வருகிறார். வெள்ளை பலகையில் என்ன வரைய வேண்டுமோ அதை, ஒரு பென்சில் எடுத்து தனது கை தோலை கீறி படமாக வரைந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். பென்சில் அல்லது பிற கூர்மையான குச்சியை எடுத்து கை தோலில் கீறும்போது, அதே வடிவில் தோலில் வீக்கம் ஏற்பட்டு அது ஒரு வரைபடமாக மாறுகிறது. பேராசிரியர் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு அவரது தோலும் ஈடுகொடுத்து செயல்படுகிறது. இந்த செயலால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதற்கு ஒரே காரணம் அவருக்கு urticaria(அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி) என்ற வியாதி உள்ளது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டால், அவரது எந்த உறுப்பில் உள்ள தோல் மீது கீறினாலும் தடிப்புகள் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மறைந்து விடும். இது பற்றி பேராசிரியர் Zoe Waller கூறுகையில், இந்த அபூர்வமான அம்சம் எனது தோலில் இருப்பது எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதுடன், அவ்வாறு செய்யும்போது சிறிதளவு வலியும் ஏற்படாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான முறையில் பாடம் எடுப்பதால், இவரிடம் பாடம் பயில அதே துறையை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 April 2015

கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி வழங்கப்பட்ட துண்டறிக்கை.

                                     
மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ்,    மாநில துணைத்தலைவர், சக்திவேல்,    நாமக்கல்மாவட்ட செயலர்  ராமு,   நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன்,    ஈரோடு மாவட்ட செயலர்,  திம்மராயன்,   கரூர் மாவட்ட மகளிரணி செயலர்,  உமா உள்ளிட்டோர் கோவை  மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக  சாதனைகளை  விளக்கி   துண்டறிக்கைகளை வழங்கினர்.

                                     

2 April 2015

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் 

ஆர்ப்பாட்டம் 






மாவட்ட   தலைவர்   E.P. தங்கவேல், தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது. தலைமையாசிரியர் கழக பொருளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர் .


 கலந்து  கொண்ட  மாநில பொறுப்பாளர்கள்
 R. செல்வம்மாநில செய்தி தொடர்பாளர்S. சேகர்மாநில துணைத்தலைவர் ,  T. செல்வம்மண்டல செயலர்   மற்றும் கலந்து  கொண்ட   மாவட்ட பொறுப்பாளர்கள்  J. அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், S. வையாபுரிமாவட்ட பொருளாளர் K.அருண்குமார்மாவட்ட  அமைப்பு  செயலாளர்S.ஞானசிகாமணி,மாவட்ட மகளிரணிசெயலாளர்
 M. முருகன்மாவட்ட  தலைமையிட  செயலாளர் G.ஆரோக்கியம்
மாவட்ட  செய்தி தொடர்பாளர், M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  G .ராஜாமாவட்ட  தணிக்கையாளர் , மா.சிவராமகிருஷ்ணன்,மாவட்டத் துணைத் தலைவர .காவேரிமாவட்டத் துணைத் தலைவர் P.வினோத்மாவட்ட இணைச்செயலர்

31 March 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் விடுத்துள்ள அறிக்கை:மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளர் சஸ்பெண்டை கண்டித்து 1ம் தேதி ஆர்ப்பாட்டம் முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Dinakaran Dharmapuri தமிழகத்தில் 1980ம் ஆண்டு முதல் பிளஸ்2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. துவக்கத்தில் 38 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தேர்வு துறை தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேல் எடுக்க நினைக்கிறது. தேர்வு நடக்கின்ற மையங்களுக்கு இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள், மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய் வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். 

30 March 2015

தருமபுரி ; தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கக் காலத்தில் 38 சதமாக இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 90 சதத்தைக் கடந்து விட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தேர்வுத்துறை கடுமையான, தேவையற்ற சில நடவடிக்கைகளை ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்து வருகிறது.

29 March 2015

100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?

 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.

               தங்கள் மாவட்டம், மாநிலத்திலேயே, தேர்ச்சி விகிதத்தில் முதல் மாவட்டமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வித்துறை அதிகாரிகளும் இந்தக் கொடுமையை கண்டுகொள்வதில்லை என்ற புகார்களும் உண்டு.

               ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்புமிக்க கல்விமுறையானது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது, இதுபோன்ற ஒரு கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருவோர், எப்பேர்பட்டவர்களாக இருப்பர் போன்ற அம்சங்களை நினைத்துப் பார்க்கும்போது, சமூக அக்கறையுள்ள பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

26 March 2015

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 28 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம் 
               
சார்பில் 28 மாவட்டங்களில்  01.04.15 அன்று  கண்டன ஆர்பாட்டம்

மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் 

அறிக்கை 

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக   இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை   தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை,  எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
           தேர்வு அறைகளில்  மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள்  கண்டு பிடித்தால்,  அறை கண்காணிப்பாளர்கள்மீது 
பணி  இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை  எடுத்துள்ளது.    பள்ளிக்கல்வித்துறையின்  நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின்  செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15  அன்று  மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை   தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                              இப்படிக்கு 
                                                                                                      ( R.செல்வம்) 
                                                                               மாநில செய்தி தொடர்பாளர் 
                                     தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்