புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label Public Exam. Show all posts
Showing posts with label Public Exam. Show all posts

22 February 2015

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

 அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர். தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியே மருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்: ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்:

 பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை:

21 February 2015

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு கண்காணிப்பு கேமரா

 பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் கூறினார்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

 மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

12 February 2015

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு

பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

           கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.

10 February 2015

பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


          பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 31 வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10 வரையிலும் நடைபெறுகின்றன. இப்போது பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வுக்கான பல்வேறு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்து வருகிறது.




          இந்த நிலையில், தேர்வுகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகளுக்கு மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

2 February 2015

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு

    மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.