புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label மாநில அமைப்பு செய்திகள் (TNHSPGTA). Show all posts
Showing posts with label மாநில அமைப்பு செய்திகள் (TNHSPGTA). Show all posts

30 December 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக (TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

இன்று 30.12.2015 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி  ஆசிரியர் கழக (TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன்  அவர்கள்  பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை  சந்தித்து  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். 

 பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன், JD HSS  திரு.முத்து பழனிசாமி, JD Secondary திரு, நரேஷ், JD Personal,  திரு.கருப்பசாமி , JD Vocational திரு. பாஸ்கர் சேதுபதி, JD NSS திரு.பொன்னையா, Director, SCERT திரு. ராமேஸ்வர முருகன்,   அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திருமதி. வசுந்தரா தேவி , JD திருமதி. சசிகலா, JDதிருமதி. லதா, SSA இயக்குனர் திரு.அறிவொளி ஆகியோரை நமது மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன் , மாநில பொருளாளர் திரு. கிருஷ்ணன் ஆகியோர்  சந்தித்து   புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்


11 September 2015

TNHSPGTA SPECIAL MEETING AT TRICHY ON 12.09.2015

             An important meeting will be held on Tomorrow 12/09/15 AM Saturday  at Trichy Syed moorsha HSS(Marakadai stop) regarding State President  felicitation function. All the State  0ffi. Bearers/Zonal sec /Dt Pre/Sec. should attend.

With concern,
Prabakaran. R
State General Secretary

TNHSPGTA


2 September 2015

நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது

மிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்   மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும்   முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்காக ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் அற வழியில்  குரல் கொடுத்தும்,தொடர்ந்து போராடி வரும்   நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது அளித்து பாராட்டு தெரிவித்த தமிழ் செம்மொழிப்பல்கலைக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.விருது பெற்ற மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னார் நல்ல ஆரோக்கியத்தையும்,நீடித்த வாழ்நாளையும் பெற்று வாழ்க வளமுடன் என மனமுவந்து வாழ்த்துகிறோம்.நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்

27 August 2015

மாநில பொதுக்குழு கூட்டம் - வேலூர் அனைவரும் வருக! வருக !!

   மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் வேலூர் மாவட்டத்தில்  29/08/2015 சனிக்கிழமை 10 மணி அளவில் நடைபெறுகிறது. 
 இடம் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி , வேலூர்  to சித்தூர் சாலை தொடர்புக்கு:
திரு.  பாஸ்கரன், வேலூர் மாவட்ட தலைவர் 
80125 28411 





3 May 2015

புதுமனை புகு விழா கொண்டாடிய மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு மாநில தலைவர் வாழ்த்து

புதுமனை புகு விழா கொண்டாடிய  மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு  மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர் E.P.தங்கவேல்,  கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்தனர் .



26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையில் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



14 April 2015

கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி வழங்கப்பட்ட துண்டறிக்கை.

                                     
மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ்,    மாநில துணைத்தலைவர், சக்திவேல்,    நாமக்கல்மாவட்ட செயலர்  ராமு,   நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன்,    ஈரோடு மாவட்ட செயலர்,  திம்மராயன்,   கரூர் மாவட்ட மகளிரணி செயலர்,  உமா உள்ளிட்டோர் கோவை  மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக  சாதனைகளை  விளக்கி   துண்டறிக்கைகளை வழங்கினர்.

                                     

31 March 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் விடுத்துள்ள அறிக்கை:மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளர் சஸ்பெண்டை கண்டித்து 1ம் தேதி ஆர்ப்பாட்டம் முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Dinakaran Dharmapuri தமிழகத்தில் 1980ம் ஆண்டு முதல் பிளஸ்2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. துவக்கத்தில் 38 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தேர்வு துறை தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேல் எடுக்க நினைக்கிறது. தேர்வு நடக்கின்ற மையங்களுக்கு இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள், மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய் வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். 

30 March 2015

தருமபுரி ; தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கக் காலத்தில் 38 சதமாக இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 90 சதத்தைக் கடந்து விட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தேர்வுத்துறை கடுமையான, தேவையற்ற சில நடவடிக்கைகளை ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்து வருகிறது.

26 March 2015

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 28 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம் 
               
சார்பில் 28 மாவட்டங்களில்  01.04.15 அன்று  கண்டன ஆர்பாட்டம்

மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் 

அறிக்கை 

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக   இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை   தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை,  எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
           தேர்வு அறைகளில்  மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள்  கண்டு பிடித்தால்,  அறை கண்காணிப்பாளர்கள்மீது 
பணி  இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை  எடுத்துள்ளது.    பள்ளிக்கல்வித்துறையின்  நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின்  செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15  அன்று  மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை   தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                              இப்படிக்கு 
                                                                                                      ( R.செல்வம்) 
                                                                               மாநில செய்தி தொடர்பாளர் 
                                     தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்