புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label STUDENTS ZONE. Show all posts
Showing posts with label STUDENTS ZONE. Show all posts

17 September 2015

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்


ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

6 May 2015

மறுகூட்டலுக்கு மே 8முதல் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.

*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.

*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது.

பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

6 March 2015

வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...! புத்தகங்கள் நம் இரண்டாவது இதயங்கள்.

நம் ஆன்மாவை ஆனந்த மயமாக்கும் காகித ஆலயங்கள். பரந்தவானில் பறந்த பறவை ஓய்வெடுக்கக் கூடு திரும்புமே அதைப்போன்று, நாம் என்ன வேலைசெய்தாலும் நம் மனம் நிம்மதியடைவது புத்தகங்களை வாசிக்கும்போது மட்டும்தான். சூடுதான் சூரியனின் அடையாளம்; புத்தக வாசிப்புதான் உயிர்வாழ்தலின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிதிலமடைந்திருக்கலாம். ஆனால் அன்று எழுதப்பட்ட புத்தகங்கள் சுவடிகள் தாண்டி,அச்சு இயந்திரம் தாண்டி இதோ நம்தொடுதிரை அலைபேசிகளிலும் இணையப் பக்கங்களிலும் இன்னும் இளமையோடு நம் மனதோடு மவுனமாய் பேசிக்கொண்டிருக்கிறதே. காலத்தைக் காலமாக்கிய இந்தச் செப்படி வித்தை எப்படி நடந்தது? மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே! வாசிப்புதான் வசிப்பின் அடையாளம். வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காதநாள்.

4 March 2015

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த அழுத்தத்தை திணிக்க முயல வேண்டாம் : வைகோ

  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் நாளை (05.03.2015) தொடங்குகின்றன. மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் அல்ல.

3 March 2015

மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம்

பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் உருவாக்கும் 9 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். சேலம் அயோத்தியாப்பட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், புதிய நிர்வாக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், இஸ்ரோ மாணவர் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் படிக்கும் போதே, அனைத்து துறைகளிலும் முழுமையான திறன் பெற்றவர்களாக வெளி வருவார்கள். இது போன்ற சிறந்த மாணவர்களை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம்.

23 February 2015

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய "நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு' குறித்த கருத்தரங்கில் அவர் கூறியது: பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வாரம் ஒரு நாள் விளையாட்டு வகுப்பு என்பதற்கு பதிலாக நாள்தோறும் விளையாட்டு வகுப்பை நடத்த வேண்டும்.

22 February 2015

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

 அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர். தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியே மருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது.

21 February 2015

தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 2011க்கு பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது. தகுதித்தேர்வு சான்றுகளின் உண்மைத் தன்மை தேவை எனக் கூறி பள்ளி நிர்வாகங்கள் மறுப்பதால் அதற்கான சான்றை பெற சி.இ.ஒ., மற்றும் சென்னை டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அலைவதாக புகார் கூறுகின்றனர்.

12 February 2015

பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை: 104-இல் அழைக்கலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.

                  தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1 February 2015

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.

        கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. 

8 January 2015

மாணவர்களுக்கு பயனுள்ள சில முக்கிய இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

30 December 2014

பள்ளி மாணவர்களுக்காக தேசிய அளவில் இணைய அறிவுக்களஞ்சியம்

பள்ளி மாணவர்களுக்காக   தேசிய அளவில் இணைய  அறிவுக்களஞ்சியம் மத்திய  அரசு தொடங்கி உள்ளது. மாணவர்கள்  தங்களுக்கு தேவையான தகவல்களை www.nroer.gov.in  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .