நேற்று 13.1.16 அன்று நமது அமைப்பின் சார்பாக 30 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நமது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும் நம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
மேலும் சந்திப்பின் போது ஒரு சில கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.
1. மேல்நிலைப்பொதுத்தேர்வு பணியினை பணியில் சேர்ந்த நாள் முதல் கருத்தில் கொண்டு தேர்வுப்பணி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அவ்வாறு செய்வதாக மு க அ அவர்கள் தெரிவித்தார்.
மேலும் தேர்விற்கான E B S படிவம் நமது பள்ளிக்கு இ மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது. அதை அனைவரும் சரிபார்க்க தெரிவித்தார். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் உடனடியாக அலுவலகத்திற்கு தெரிவிக்க சொன்னார்.
செய்முறைத்தேர்விற்கு பணி நியமனம் கடந்த ஆண்டைப்போல அருகாமையில் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒப்புக்கொண்டார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உண்மைத்தண்மை உடனடியாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. காலதாமதம் ஆவதற்கான காரணத்தை தெரிவித்தார்.
தகுதிகாண் பருவம் மற்றும் தேர்வு நிலை படிவம் பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
11 ஆம் வகுப்பு தாள் திருத்துவதற்கான உழைப்பூதியம் உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் சில கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது.
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் நம்மாவட்ட தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க மாணவர்களுக்கு திருப்புதல் பயிற்சி உரிய முறையில் அளிக்க கேட்டுக்கொண்டார். நாமும் அதற்கு உறுதி அளித்துவிட்டு மகிழ்வுடன் விடைபெற்றுக்கொண்டோம்.
இவண் மோ.கலாநிதி மாவட்டத்தலைவர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) விழுப்புரம் மாவட்டம்
No comments:
Post a Comment