புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

10 January 2016

அனைத்துவகை ஆசிரிய நண்பர்களே! ! ஒரு ஆசிரிய தொழிற்சங்க அடிப்படை ஊழியனாக எனது சில கருத்துக்கள்!!

அனைத்துவகை ஆசிரிய நண்பர்களே! !

ஒரு ஆசிரிய தொழிற்சங்க அடிப்படை ஊழியனாக எனது சில கருத்துக்கள்!!

எந்த சங்கமாக இருந்தாலும் அச் சங்க நிர்வாகிகள் பெரும்பான்மையினர் போற்றுதலுக்குரியவர்கள் .தங்களின் பணியோடு பிற ஆசிரியர்களுக்காக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுபவர்கள்.அதிலும் சிலர் குடும்பத்தைக்கூட கவனிக்காமல் சங்கத்துக்காக விடிய விடிய பயணங்களிலும்,தபால் அனுப்புவது,கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பது என கடும் பணியில் உணவைக்கூட மறந்து மூழ்கிப் போவார்கள்.

ஆனால் அவர்களின்  அருமை,முக்கியத்துவம் தெரியாது ஆசிரியர்கள்  அனைத்து வகையிலுமே இருக்கின்றார்கள்.குறிப்பாக உயர்நிலை மேல்நிலையில் அதிகம்.

பள்ளிக்கே சென்று உறுப்பினர் சந்தா கேட்போம்.சங்க வித்தியாசம்  இல்லாமல் புதியதாக உறுப்பினராக சேர வலியுறுத்துவோ.எதிராக வரும் கருத்துக்களையும் கூர்மையாக உள்வாங்கிக் கொள்வோம்.போட்டியாளர்களைப் பற்றி விமர்சனம்  செய்வோம்.தனிநபர் விமர்சனம்  தவிர்த்து கொள்கை அடிப்படையை பேசுவோம்.வெகு சிலர் அங்கே பேயறைந்தது போல் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கேட்பது போல் பாவனை செய்வார்கள்.சிலர் பணம்  மொய் எழுத வந்திட்டான்கள் என்ற மனநிலையோடு இருப்பார்கள்.சிலர் பார்த்ததும்எங்கோ ஒளிந்து கொள்வார்கள்.மிக முக்கியமாக கடைசி நேரம் போல நோட்டு திருத்துவார்கள்.மாணவனுக்கு அன்றுதான் வெகு சிரத்தையாக பாடம் நடத்துவார்கள்.சிலர் மதிய உணவு இடைவேளையில் சிறுடப்பா உணவை 1 மணிநேரம் கூட மெதுவாக நன்கு மென்று சுவைத்து ரசித்து உண்பார்கள்.சிலர் சங்கத்துக்காரர்கள் ஏதோ தங்களின்  மிகசிறிய பிரச்சனையை பெரிய பிரச்சனையாககருதவில்லை என்பார்கள்.

மகளிரில் சிலர் தங்களின் கணவனின் மேல் பழியைப் போட்டு கேட்டுபேசி பிறகு சங்கத்தில் இணைவதாக சொல்வார்கள்.இது போல சக மானிடப் பிறவிகளின் மனநிலையை,உளவியலைக் கற்று வர எனக்கு சங்கம் வாய்ப்பளித்ததை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.

ஆம் 50000ரூ மாத சம்பளம் வாங்கும் நாங்கள் பள்ளி பள்ளியாக ஆசிரியர்களை தேடி பணம் பெறவேண்டிய அவசியம் என்ன?எதற்காக அவர்களிடம் சிறு தொகையான 200 ரூ மற்றும் புத்தகத்திற்கு 100ரூ பெற மணிக்கணக்கில் பேசுகிறோம்.?
எங்களூக்கு அதிலென்ன ஆதாயம்?

பதில் இருக்கிறது.
எப்போதும் தன்னுடைய பங்களிப்பு இல்லாமல் ஒரு நிகழ்வு நடந்தால் அதில் ஆர்வமோ,அக்கறையோ,ஈடுபாடோ,இருக்காது.இது அடிப்படை மானிட உளவியல் கருத்து.தான் கொடுக்கும் சிறு தொகை பெரிய கவனத்தை ஈர்த்திட செய்யும்.அனைவரையும் ஒருங்கிணைத்து  பொது எதிரிக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது இயற்கையின் கொள்கை.

பாருங்கள் வனங்களில் காட்டெருமைகள் ஒன்றாக சேரும் போது சிங்கம் தோற்றோடும்.அரசு அதிகாரம்  ஊழியர் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஆயுதம்.மிக எளிதாக 17A அல்லது 17B போன்ற நடவடிக்கை எடுத்து முடக்கி விடலாம் ஒரு தனிநபர்களை.

ஊழியர் ஒற்றுமையை குலைப்பது என்பது அரசியல்.ஒற்றுமையில்லாத கூட்டம் உயர் அதிகாரியின் சர்வாதிகாரம் த்தால் சிதறடிக்கப்படும்.பல சர்வாதிகாரி கள் உருவாகிவிடுவர்.இதற்காகத்தான் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

100க்கு அல்லது 200க்கு சங்கம் அல்ல.மாதம் ரூ 150 அல்லது 200 கொடுத்து நாளிதழ் வாங்குபவர் 100ரூ கொடுத்து சங்க இதழுக்கு சந்தாதாரர் ஆகவெகுவாக யோசிப்பர்.

மிக சாதாரணமாக உணவகங்களிலோ,பொழுது போக்கு மையங்களிலோ பல ஆயிரங்கள் செலவிடும் நம் ஆசிரியர் நண்பர்கள் ஆண்டு உறுப்பினர் சந்தா உறுப்பாண்மை ரசீது பெற்றுவிட்டு மறந்தது போல் நடிப்பதும்,ஏமாற்றுவதும் மிகுந்த வலியைத் தந்துவிடுகிறது.காரணம்தனியார் மயம் என்கிற நுகர்வுக் கலாச்சாரமே!

எங்கேயாவது ஸ்பான்சர் பெற்று சங்கம் நடத்திவிடலாம்.ஆனால் யாருக்காக நடத்துகிறோம் என்கிற போது உணர்வுகள் வற்றிப்போகும்.ஊழியர் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாவிட்டால் சங்கங்கள் வருங்காலத்தில் அழிவுறநேரிடும்.

சங்க நிர்வாகிகள் எந்த சங்கமாக இருந்தாலும் பிச்சைக்காரர்கள் அல்ல என்பதை உணருங்கள்!!
முதலில் பணத்தை கொடுங்கள்.பின்னர் பேசுங்கள்.உற்சாக மனநிலை என்பது பணத்தால் வராது.ஆனால் ஊழியர் கள் ஆதரவு என்பதால் வரும்.

முடிந்தால் ஓரே ஓரு ஆண்டுமட்டும் சங்கநிர்வாகியாக இருந்து பாருங்கள்.பிறகு எப்போதும் நீங்கள் பேசிட மாட்டீர்கள்.



இதனை கொள்கை ரீதியாக   கனிவோடு நேரத்தைச் செலவிடும தோழரகள்் அனைவருக்கும்  கனிவோடு சமர்ப்பிக்கிறேன்.

No comments: