புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

23 January 2017

TNHSPGTA State General Body meeting Held in Thanjavur on 22.1.17 at St.Antony's HSS

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொதுக்குழுகூட்டம

           22.01.2017 அன்று வீரம் பொருந்திய தஞ்சை மண்ணில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப்பொதுக்குழு, மாநிலத் தலைவர் முனைவர் *திரு.வே. மணிவாசகன்*  

 நடைபெற்றது.மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.💐


அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா.பிரபாகரன் அவர்கள் 20 தீர்மானங்கள் வாசிக்க, அத்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன. 



 அப்பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் மாநில, மாவட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


 💐மேலும்  நமது தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம்,  மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலாளர் T.செல்வம், மாவட்ட பொருளாளர்,  சுப்பிரமணி மற்றும்  மாவட்டப்  செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டோம். .💐


அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் அரசு பொதுத் தேர்வுப் பணி உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரி 

⚫⚫⚫⚫

இரண்டு கட்ட 

போராட்டங்கள்

 ⚫⚫⚫


1. துறை அலுவலர்,பறக்கும் படை அலுவலர் கூட்டங்கள்  புறக்கணிப்பு செய்வது.


 2. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முழு மனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்  கொள்கிறோம்.

 அதனை வெற்றியடைய செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதால் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து போராட்டம் வெற்றியடையச் செய்ய  வேண்டுகிறோம். மாநில பொதுக்குழுவை மிகச்சிறப்பான முறையில்  அனைத்து விதத்திலும் பாராட்டும் விதத்தில் நடத்திய தஞ்சை மாவட்டத் தலைவர் ,மாவட்ட தலைவர்,குமார் மாவட்ட செயலாளர் கோபிசந்தர் மற்றும் பொறுப்பாளர்கள், அம்மாவட்ட முதுகலை ஆசிரிய நண்பர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த  அனைவருக்கும்  மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐


 ஜி.ஆரோக்கியம்

மாவட்ட செய்தி தொடர்பாளர்,   தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், 

தருமபுரி மாவட்டம்.*


மாநில பொதுக்குழு தீர்மானங்கள

21 December 2016

இன்று ( 21.12.16) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்க்குழுக் கூட்டம்( TNHSPGTA)

(21.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி மாவட்டமான கும்பகோணம் நகர  மேல்நிலைப்பள்ளியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக கும்பகோணம் கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20 December 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட  மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.
இன்று(20.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி  மாவட்டமான பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.