19 July 2016
| 19.7.2016 >> PGT POST 1600 | மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்
18 July 2016
Transfer Counselling Govt Order 2016
Transfer Counselling Govt Order
https://www.dropbox.com/s/i7tjxnhiwl3wubf/Transfer%20GO%2C%20Director%20Proceedings%20%2C%20Transfer%20Appilcation.pdf?dl=0
11 July 2016
09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.
TNHSPGTA.
மாநிலப் பொதுக்கூட்டம்.
புதுக்கோட்டை. 09:07:16 சனிக்கிழமை.
09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
(TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்
--------------------------------
----------------------------
👉🏾தீர்மானம்: 1. தமிழக முதல்வருக்கு வாழ்த்து. . .
தமிழகத்தின் முதல்வராக 6-வது முறை பதவியேற்றிருக்கும்,மாண்புமிகு. முதல்வர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தின் புதிய அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு.பா.பெஞ்சமின் அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 2. பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்தல். .
2-(1). கடந்த 2015-2016 ஆம் கல்வியாண்டில், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவில்லை. 2016-2017ஆம் கல்வியாண்டில் (நடப்புக் கல்வியாண்டில்) கடந்த ஆண்டுக்கும் சேர்த்து சுமார் 200உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
2-(2). கல்வி உரிமையியல் சட்டப்படி(RTE Act) ஆசிரியர் மாணவர்கள் விகிதம் 1 : 40 என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர் பணியிட எண்ணிக்கையினை அதிகரித்திட வேண்டும் எனவும்
2-(3). 1989 முதல் 2011 வரை தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்து மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தமிழ் உட்பட அனைத்து கலைப் பாடங்களுக்கும் புதிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் எனவும்
2-(4). மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் இதுநாள் வரை 3181முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கியமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்கின்ற அடிப்படையில் மேலும் 5000முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி, நியமித்திட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2-(5). அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தமிழ்,ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்கள் சுமார் 500-700 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் மிகுந்த சிரமமான சூழலில் பாடம் போதிக்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பருவத் தேர்வு கூட நடத்திட சாத்தியமில்லாத சூழ்நிலையே நிலவுகிறது. எனவே சுகூநு ஹஉவ-ன்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மொழி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் இம் மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 3. பணிமாறுதல் கலந்தாய்வு சார்ந்தவை. . .
3-(1) பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டபின்,மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திடவும், பின்பு முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு, ஒளிவு மறைவற்ற முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திட வேண்டும் எனவும்,
3-(2) தற்போதுள்ள ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வு முறையில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக முன்னுரிமை எண்.10 உள்ளவரின் இடம் காலி ஏற்படும் போது,தற்போது உள்ள முறைப்படி 11ஆம் நபருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, ஆனால் உண்மையான முன்னுரிமை முதல் நபருக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான குறைபாடுகள் களையப்பட்டு முறையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும்
3-(3). பொது மாறுதல் கலந்தாய்வில் உயிரியல் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படும் போது, அந்த இடத்திற்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநில பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 4. IIT, IIS, . மற்றும்NEET – போன்ற போட்டித் தேர்வுகளை ஒட்டிய புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுதல். . .
👉
4-(1). IIT, IIS, . மற்றும் NEET – போன்ற போட்டித் தேர்வுகள் கட்டாயம் என்ற நிலையில், தமிழக மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் எவ்வித மாற்றமுமின்றி மாற்றியமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் தமது பாடத்திட்டத்தினை முறைப்படுத்திக் கொள்கின்றன. மற்ற மாநிலங்களில் இப்பாடத்திட்டம் அப்படியே அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் NCERT-ல் உள்ள படி ஆங்கில வழியில் உள்ள பாடத்திட்டத்தினை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தமிழக மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
4-(2). அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும்,கல்வித் திறனை மேம்படுத்திடவும், 80ரூ க்கு மேல் அறிதல், புரிந்து கொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாட்கள் அமைய வேண்டும் எனவும், மதிப்பீட்டு முறையும் மாற்றப்பட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
4-(3). மேல்நிலைக் கல்வியில் உள்ள +1, +2 வகுப்பிற்கு பருவமுறைத் தேர்வுகள் (SemesterSystem) கொண்டு வரவும், அதாவது இரண்டு வருடத்திற்கும் சேர்த்து 4பருவங்களாகப் பிரித்து Semesterமுறையில் தேர்வுகள் அமைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 5. 7-வது ஊதியக்குழு சார்ந்தவை. . .
நடுவண் அரசின், 7-வது ஊதியக் குழுவில், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18,150/-என்பதை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்துள்ளனர். இதனையே அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தினை அளித்திட வேண்டும்
தமிழகத்தில் 01.06.2009 முதல் முதுகலை ஆசிரியர்கள் ரூ.14,100/-என்ற குறைவான ஊதிய விகிதத்தினையே இன்று வரை பெற்று வருகின்றனர். இதனை மாற்றி அமைத்து, எதிர்வரும் ஊதியக்குழுவின் பரிந்துரையில் ரூ.18,150/- என்பதை அடிப்படையாக வைத்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டுமாய் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 6 . மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம் வேண்டுதல். . .
மேல்நிலைக் கல்வியில் உள்ள சுமார் 3400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையில் தனி இயக்குநரகம் அமைத்திட வேண்டும் அல்லது மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநர் பணியிடமாவது ஏற்படுத்தி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பணி சார்பான தேவைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 7. மேல்நிலைக் கல்விக்கான ஒரு நபர் குழு அறிக்கை வெளியிட வேண்டுதல். .
மேல்நிலைக் கல்வியில் உள்ள இடர்பாடுகளை களையும் விதமாக அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவான திரு. ஜெகந்நாதன் குழு,திரு.கருணாகரன் குழு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட்டு முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 8. தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் நீக்கிட வேண்டுதல். . .
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சியில் அமரும் போதே ஊஞளு திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டு, பழைய ஓய்வூதியத்திட்டமே பின்பற்றப்படும் என கூறினார்கள். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை நீக்குவது பற்றி ஆராய ஒரு குழுவினை அமைத்துள்ளார்கள். காலம் தாழ்த்தாமல் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே நடைமுறைப்படுத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 9. 2004-2006 -தொகுப்பூதியக் காலத்தை முறையான பணிக்காலமாக்கிட வேண்டுதல். . .
2004 முதல் 2006 முடிய உள்ள காலங்களில் தொகுப்பூதியத்தில்,பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து அக்காலங்களுக்குரிய நிலுவை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 10. உதவித் தலைமையாசிரியர் படி வழங்கிட வேண்டுதல். ..
மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு படியாக ரூ.1000/- ஒவ்வெரரு மாதமும் வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 11. இடஒதுக்கீடு முறையில் மாணவர்களை சேர்த்தலைக் கண்டித்தல். .
அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என எவ்விதமான அரசாணையும் இல்லை. ஆனால் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் நிலை உள்ளது. யாருக்கும் பள்ளியில் சேர்க்கை இல்லை எனக் கூறும் நிலையே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் இச்செயல்முறையினைக் காரணம் காட்டி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதை இம்மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
👉
தீர்மானம்: 12. அனைத்து துறைப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்திட வேண்டுதல். . .
ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள்,அறநிலையத்துறைப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், இது போன்ற அனைத்துப் பள்ளிகளும் அரசின் நேரடி நிதியிலிருந்தே நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட பள்ளிகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகளுடன் இணைத்து பள்ளிக் கல்வித்துறை என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 13. ஒரே நிலையில் 30ஆண்டுகள் பணிக்காலம் - 6ரூ ஊதிய உயர்வு வேண்டுதல். .
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் 30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கு6ரூ, சிறப்பு நிலைக்கு 6ரூ ஊதிய உயர்வு வழங்குவது போல் 30ஆண்டுகள் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணி முடித்தவருக்கு6ரூ ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
👉 தீர்மானம்: 14. தேர்வுத் துறை சார்ந்த கோரிக்கைகள். . .
14-(1). மேல்நிலைக் கல்வியில்,ஒருங்கிணைந்த விடைத்தாள் திருத்தும் மையங்கள் கல்வி மாவட்டம் தோறும் அமைத்திட வேண்டும் எனவும்
👉
14-(2). மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக ரூ.20/- வழங்கிட வேண்டும் எனவும்
👉14-(3). மாணவர்கள் எதிர்கால நலத்தினைக் கருத்தில் கொண்டு,முதுகலை ஆசிரியர்களுக்கு நாள்
ஒன்றுக்கு மொழிப்பாடத்திற்கு (காலை 10, மாலை 10) 20தாள்களும், மற்ற பாடங்களுக்கு (காலை 8, மாலை 8) 16 தாள்களும் விடைத்தாள் திருத்த வழங்கிட வேண்டும் எனவும்
👉 14- (4). தேர்வுக் கால பணியான, துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், வழித்தட அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர்,பறக்கும் படை உறுப்பினர்,வினாத்தாள் கட்டுக் காப்பாளர் போன்ற அனைத்து பணிகளுக்குமான உழைப்பூதியத்தினை தற்போது இருப்பதை விட 3 மடங்கு உயர்த்தி வழங்கிட வேண்டும்
9 July 2016
8 July 2016
7 July 2016
கரூர் மாவட்ட TNHSPGTA வின் பொதுக்குழு கூட்டம் 7.7.16 ல் MHSS பள்ளியில் மாவட்ட தலைவர் திரு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில து.தலைவர் திரு.சக்திவேல் மாவட்ட செயலர் திரு.பழனிசாமி மாவட்ட து.தலைவர் திரு.ஜான் ஆகியோர் முனனிலை வகித்தனர்.
இனறைய கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது.
1
நமது அமைப்பை பற்றியும் மாநில தலைவர் பற்றியும் அவதூறு பரப்பி வரும் விசமிகளை இப்பொதுக்குழூ வன்மையாக கண்டிக்கிறது.இத்தகைய செயல் தொடருமாயின் தகுந்த நடவடிக்கை எடுப்பது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
2.
தேர்வு நிலைக்கு சிறப்பு அமர்வு ஏற்படுத்தி ஆணை வழங்கிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது..
அதே வேளையில் உண்மைத் தன்மை பெறப்படாத ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை ஆணைர வழங்க இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
3.
மேலும் மாநில பொதுக்குழுவில் மாவட்டத்தின் சார்பில் சமர்பிக்க வேன்டிய கருத்துருக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
24 June 2016
மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? மாநில சட்டத்ததுறை செயலாாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
நேரடி நியமனம் பெற்ற முதுகலையாசிரிய நண்பர்களே, வணக்கம்.
பள்ளிக்கல்வித்துறையில் பெரிய வகுப்புகளை (11,12 ) கையாளும் ஆசிரியர்கள் நாம். ஆனால் நமது ஊதியம், பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளையும், இந்த மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
1966 ம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையை இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதன் பேரில் தமிழகம் அரசு 1.7.1978 அன்று தமிழகத்தில் 10+2+3 முறையை அமல்படுத்தியது. அன்று சுமார் 750 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிறைய கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. முதுகலையாசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.675 நிர்ணயிக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களை விட 25 ரூபாய் மட்டுமே குறைவு என்பதாலும், தங்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி என்பதாலும் மேல்நிலைக் கல்வியில் பல முதுகலையாசிரியர்கள் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல ஆர்வத்துடன் கற்பித்தனர்.
இந்நிலையில் நமது பணித்தொகுதிக்கான பணிவிதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகள் என்ற பெயரில் அரசாணை எண் 720, நாள்.28.04.1981 ன் படி வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு 10 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேரும் போது எந்த முதுகலையாசிரியர் 10 ஆண்டு ஆசிரியப் பணியை முடித்திருப்பார்? அதனால் 10 ஆண்டு ஆசிரியப் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்கே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கப்பட்டது. 1988 ல் நமது முதுகலையாசிரியர்கள் 10 ஆண்டு பணியை முடித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் 7 காலிப்பணியிடங்களில் 2 : 5 என்ற விகிதத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலையாசிரியர்களை நியமிக்கலாம் என அரசாணை எண் 1620. நாள் 18.10.1988 ன் படி மேற்காண் அரசாணை 720ன் விதி 2( b)(1) ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் பங்கு கேட்க, மேற்காண் விகிதம் 2 : 5: 2 என மாற்றப்பட்டது. 9 தலைமையாசிரியர் பணியிடங்களில் 2 பணியிடங்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பட்டம் மட்டும் பெற்றவர் தலைமையாசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான புண்ணியத்தை அரசாணை 542, நாள் 29.06.1994 தேடிக்கொண்டது. இதில் ஒரு பத்து வருடம் கழிந்த்து. சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மீண்டும் விகிதாச்சாரம் 25 என மாற்றப்பட்டது.
இன்று பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பள்ளிக்கல்வி இயக்குனராக கூட ஆக முடியும். ஆனால் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவதற்குள் அவரது பணிக்காலம் முடிந்து விடும். அரசு நமக்கு வகுத்து தநதிருக்கும் விதிகள் அப்படி.
ஒரு பள்ளியில் முதுகலையாசிரியர் உதவித்தலைமையாசிரியராக இருப்பார். அவரிடம் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் சில வருடங்கள் கழித்து மாவட்டக்கல்வி அலுவலராகவும், முதன்மைக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பார்.
இன்றுவரை அது தொடர்கிறது. இது பதவி உயர்வு சார்நத பிரச்சனைகள்.
சரி ஊதிய விஷயத்திலாவது அரசு நடுநிலையாக நடந்துகொண்டதா என்றால் அதுவும் இல்லை. 1978 ல் நமக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இருந்த வித்தியாசம் வெறும் ரூபாய்.25 மட்டும். அதாவது அடிப்படை ஊதியத்தில் 3.5 சதம் மட்டுமே வித்தியாசம் . இன்று கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,000. நமது அடிப்படை ஊதியம் ரூ.14100. ஏறத்தாழ 50 சதம் அதிகம். சரி கல்லூரி ஆசிரியரை விடுங்கள். நமது உடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு? அடிப்படை ஊதியம் ரூ.13900. முதுகலைப்பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை சேர்த்தால் .ரூ.14740. நம்மை விட ரூ.640 அடிப்படை ஊதியத்தில் அதிகம். அகவிலைப்படியுடன் சேர்த்து 1440ரூபாய் பட்டதாரி ஆசிரியர் கூடுதலாகப் பெறும் நிலை இந்தியாவில் எங்கும் இருக்காது...
இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது முதுகலையாசிரியர் பணித்தொகுதிக்கென்றே உள்ளது. பதவி உயர்வு சார்ந்து பல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகள் சார்ந்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
போராடாமல் எதையும் வென்றதில்லை என்பதை மனதில் நிறுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் என்றும் துணை நிற்கும்.
தொடர்ந்து பேசுவோம்..
தங்கள் பணி சாரந்த பிரச்சனைகள், அரசாணைகள், தெளிவுரைகளுக்கு தொடர்பு கொள்க,
இரா.சீனிவாசன்,
மாநில சட்டத்ததுறை செயலாாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்,
மின்னஞ்சல் srinivasantheja@gmail.com
செல்பேசி 9942618399