புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label TNHSPGTA GENERAL BODY MEETING. Show all posts
Showing posts with label TNHSPGTA GENERAL BODY MEETING. Show all posts

29 January 2015

TNHSPGTA State Office Bearers Meeting with DSE, DGE, JDEs



மாநில பொறுப்பாளர்கள்,  இயக்குனர் மற்றும் இணை  இயக்குனர்களுடன்   சந்திப்பு 

மாநில தலைவர்,  வே.மணிவாசகன்,  
மாநில பொது செயலாளர்,  இரா.பிரபாகரன்,  மதுரை.
மாநில பொருளாளர், ஆ.கிருஷ்ணன்,  வந்தவாசி. 
மாநில அமைப்பு செயலாளர்,  இரா.புஸ்பராசு,  நாமக்கல்.
மாநில தலைமைஇட செயலாளர்,  பொ.பாலசுப்ரமணியன், சென்னை 
மாநில செய்தி தொடர்பாளர்,  ஆர்.செல்வம், தருமபுரி.
மாநில பிரசார செயலர்,  அ.க.வடிவேல்,  புதுகோட்டை.
மாநில மகளிர் அணி செயலாளர்,  திருமதி.கே.முத்துகுமாரி, தேனி.
மாநில சட்டத்துறை செயலாளர்,  இரா.சீனிவாசன்,  கிருஷ்னகிரி,

சென்னை மண்டல மாநில துணை தலைவர் எ.திருஞானம், சென்னை  & மண்டல செயலர் கு.தண்டவமூர்த்தி , திருபெரும்புதூர் ,
கடலூர்  மண்டல மாநில துணை தலைவர், அ.சு.கோவிந்தன்,  வேலூர்   &  மண்டல செயலர்  வே.ஜகத்ரட்சகன், கடலூர்.
சேலம்   மண்டல மாநில துணை தலைவர்,  S.சேகர் , தருமபுரி &  மண்டல செயலர்  தி.செல்வம், அரூர் .   
கரூர்  மண்டல மாநில துணை தலைவர், ப.சக்திவேல்  &   மண்டல செயலர் கே.சௌந்திரராஜன்,  திருப்பூர், 
திருச்சி மண்டல மாநில துணை தலைவர்,  பொ .பெருமாள் &  மண்டல செயலர்,   வை.கதிரேசன் ,  
தஞ்சை  மண்டல மாநில துணை தலைவர், எ.நடராஜன் &  மண்டல செயலர் ,கே.செல்வம் ,பதுகை ,
மதுரை மண்டல மாநில துணை. தலைவர் தீ .சோவி     &  மண்டல செயலர் ,ஜி .வீர சத்திய இராமசாமி,   தேனீ 
நெல்லை மண்டல மாநில துணை தலைவர் இரா.முருகன்  &  மண்டல செயலர்,  எம்.சுந்தரம்,   திருநெல்வேலி 

























27 January 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

   'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால்,  ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.
                        தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநில தலைவர் மணிவாசகன் கூறியதாவது:கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் தேர்வுத்துறை இயக்குனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கான முன்மொழிவுகளை தயார் செய்து, அரசுக்கு அனுப்ப, தேர்வுத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வுப்பணிகளுக்கான உழைப்பூதியம் உயர்த்தப்படாவிட்டால், பிளஸ் 2 வகுப்புக்கு நடக்க உள்ள செய்முறை மற்றும் கருத்தியல் (தியரி) தேர்வுகளை முற்றிலும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அரையாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வு கூட்டங்களில், மாணவர்களின் அடிப்படை பிரச்னையை புரிந்து கொள்ளாமல், தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது பற்றியே, முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேர்ச்சி சம்பந்தமாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் போதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் போதும், பிற மாணவர்களின் முன்னால் கேலி செய்து, மட்டம் தட்டுவதாக நினைத்து, மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

இதனால், ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தேர்ச்சி சதவீதம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நடத்தப்படும் மீளாய்வு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும், என்றார்.

TNHSPGTA STATE ELECTION 2015