தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.
புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது
8 January 2015
பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை அலுவலர் /கூ.துறை அலுவலர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, தருமபுரி மாவட்டத்தலைவர் திரு.E.P.தங்கவேல் அவர்கள், PG TRB தேர்வு-ஆயத்த கூட்டதிற்கு வருகை புரிந்த பள்ளிக்கல்வி இயக்குனர் மாண்பமை.கண்ணப்பன் அவர்களை சந்தித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை அலுவலர் /கூ.துறை அலுவலர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, தருமபுரி மாவட்டத்தலைவர் திரு.E.P.தங்கவேல் மாவட்ட செயலர் திரு அப்துல் அஜிஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு .விவேகானந்தன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் மாண்பமை.கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பு செய்தல்.
மாவட்டத்தலைவர் மற்றும் மண்ல செயலர் திரு செல்வம் இயக்குனருக்கு நினைவு பரிசு அளித்தல்
6 January 2015
தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செய்திகள் (TNHSPGTA DHARMAPURI DT NEWS)
விடைத்தாள் திருத்தும் வாயற் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத் தலைவர் திரு E.P.தங்கவேல் அவர்கள், மாநில அமைப்பு செயலர் திரு.பிரபாகரன் அவர்களை சிறப்பித்தல்
விடைத்தாள் திருத்தும் வாயற் கூட்டத்தில் நமது அமைப்பின் மாநில பொதுக்குழுஉறுப்பினர் திரு.சிங்காரவேலன் உரையாற்றுதல், மண்டல செயலர் திரு. செல்வம் , மாவட்டத் செயலர் அப்துல் அஜீஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.சேகர், கல்வி மாவட்டத் தலைவர் திரு காவேரி , மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு முருகன் உள்ளிட்டோர்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம். தருமபுரி மாவட்டத் TNHSPGTA தலைவர் திரு E.P.தங்கவேல் , மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொருளாளர் திரு.பொன்முடி, மற்றும் பிற ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்
4 January 2015
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழக தருமபுரி மாவட்ட தலைவர் இ பி தங்கவேல்,
மண்டல செயலர். ஆர்.செல்வம்,வையாபுரி,
ஞானசிகாமணி,முருகன்,அருண்குமார், சேகர், தமிழ்வாணன்
இராஜசேகர் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள்
முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி,
மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன்,மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்(பொ ) திரு.பாலாஜி மற்றும்
RMSA COORDINATOR திரு.சுப்ரமணி ஆகியோரை சந்தித்து
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்
1 January 2015
உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருக்க கற்று கொள்ளுங்கள்
நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?
31 December 2014
30 December 2014
பள்ளி மாணவர்களுக்காக தேசிய அளவில் இணைய அறிவுக்களஞ்சியம்
பள்ளி மாணவர்களுக்காக தேசிய அளவில் இணைய அறிவுக்களஞ்சியம் மத்திய அரசு தொடங்கி உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை www.nroer.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
29 December 2014
100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
28 December 2014
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! மாற்றுக் கல்விக்கான விதை
தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங் களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் அறியப்பட்ட கவிஞர் நா. முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது.
நேற்றைய - இன்றைய கல்வி நிலை, கல்வி முறைகள், கற்றல், கற்பித் தல் செயல்பாடுகள், அவற்றினால் நிகழ்ந்துள்ள சமூகத் தாக்கங்கள் என நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுய சிந்தனைகளோடு நம்மிடம் கலந்துரை யாடுகின்றன. சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக் கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம் என ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும் தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பு கின்றன. கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய மாற்றுக்கல்விக்கான சிந்தனை விதைப்பே இந்நூல்.
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
நா.முத்துநிலவன்
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014
பக்கம்: 156 | விலை: ரூ.120/-
தொடர்புக்கு: 04362 239289
நா.முத்துநிலவன்
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014
பக்கம்: 156 | விலை: ரூ.120/-
தொடர்புக்கு: 04362 239289
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்: ராமதாஸ் கோரிக்கை
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
27 December 2014
MARCH 2015 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை
எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2
தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான
விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
குடும்பத் தகராறை காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்பத் தகராறைக் காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக் கூடாது என்று மின்வாரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
26 December 2014
M.Phil., Incentives Govt order
M.Phil.,ஊக்க ஊதியம் அரசாணை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://app.box.com/s/t5a7q8mrqmipguxuo017
23 December 2014
அன்பு என்னும் சாட்டையைக் கையில் எடுங்கள்
அன்பு என்னும் சாட்டையைக் கையில் எடுங்கள்
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட, 'டாஸ்மாக்கிற்கு போகும் கலாசாரம் உருவாகியுள்ளது. டாஸ்மாக் பற்றிய கவலைகள் மட்டுமின்றி, சில மாணவர்கள் மாணவியருக்கு தரும் பாலியல் தொல்லைகள், மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றங்கள், மாணவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விதம், 'ராகிங்' என்ற பெயரில், சக மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் என, பலவிதமான செய்திகளும், அடிக்கடி செய்தித் தாள்களில் இடம் பெறுகின்றன.
தமிழ் சினிமாவில் வலம் வரும், 'வீரதீர' கதாநாயகர்கள் செய்யும் சேட்டைகளை உண்மை என்று நம்பி, தாங்களும் கதாநாயகர்களாக மாறத்துடிக்கும் அப்பாவி மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் நவீன பைக்குகளையும், பெரிய சைஸ் மொபைல்களையும் வாங்கித் தர சொல்கின்றனர்.தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, லட்சங்களை அள்ளுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பவர்கள் தானே, தற்கால பெற்றோர்!அக்கால மாணவர்களின் படிப்பு என்பது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. தங்கள் அறிவிற்கு ஏற்ற கல்வியை, விரும்பி படிக்கலாம் என்ற சுதந்திரமும் இருந்தது. ஆனால் தற்காலத்தில், தங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும்; எங்கே படிக்க வேண்டும் என்பதையே, பெற்றோர் தான்
தீர்மானிக்கின்றனர்?ஒரு மாணவனோ, மாணவியோ தாங்கள் விரும்பும் படிப்பை படிக்கும், தாங்கள் விரும்பும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இங்கே பறிக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் வன்முறை செயலே.
இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட கூட அனுமதிப்பதில்லை. அற்புதமான வீடு கூட, இந்த இடத்தில் குழந்தைகளுக்கு சிறைச்சாலையாகி போகிறது.நடுத்தர வர்க்க பெற்றோரிடையே தற்போது பரவியுள்ள இந்த கல்வி மனநோய் காரணமாக, குழந்தைகளும் மெல்ல மெல்ல மனநோய்க்கு ஆளாகிப் போகின்றனர். 10ம் வகுப்பிற்குப் பின், சிறைச்சாலைகள் போல நடத்தப்படும் குறுக்குவழி கல்வி சிறைச்சாலையிலிருந்து, இரண்டு ஆண்டு கல்வித் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்று வரும் மாணவன், கல்லூரிகளின் சேரும் போது சுதந்திரப் பறவையாகி விடுகிறான்.இரண்டு ஆண்டு மனஅழுத்தத்தையும், கேவலமான கல்வியையும் பெற காரணமான தங்கள் பெற்றோரை பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தின் காரணமாக, தங்கமான மாணவர்கள், திசை மாறிப் போகின்றனர்.
தற்போது, சென்னையில் கல்லூரி மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தும் அராஜக செயல்களால், பொதுமக்கள் அடையும் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காவல் துறையினர், தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. காரணம், இத்தகைய சமூக சீர்கேடுகளை கண்டிக்க வேண்டிய சீர்திருத்தவாதிகள் சிலர், சுயநலத்திற்காக, அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கவும், தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிக்கவும் வேண்டும். இல்லையென்றால், அது தவறு செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
ஒவ்வொரு மாணவனும், மாணவியும் ஒரு நாளில் அதிகபட்சமான நேரத்தை, அதாவது எட்டு மணி நேரத்தை செலவிடுவது ஆசிரியர்களுடன் மட்டுமே. அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெய்வமாக தெரிந்தனர். ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. மாணவர்கள், ஆசிரியர்களை பார்த்து பயந்து, ஒழுக்கமாக நடந்தது போய், ஆசிரியர்கள், மாணவர்களை பார்த்து பயந்து நடக்கும் காலம் வந்து விட்டது.தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை தரக்கூடாது என்று, சில நவீன மனித உரிமை ஆர்வலர்கள் துணை நிற்கும் போது, மாணவர்களுக்கு தவறு செய்தால் நமக்குத் துணையாய் நிற்க சிலர் இருக்கின்றனர் என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகிவிடுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், ஆசிரியர்கள் தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு, தங்கள் மாணவனோ, மாணவியோ சீரழிவை நோக்கிப் போகும் போது, வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் சூழ்நிலை கூட உருவாகலாம்.ஆசிரியர்கள், காவல் துறை நண்பர்கள் என, எல்லாருமே ஒரு வகையில் பெற்றோரே. எல்லாருக்கும் மனதில் ஈரமும், சமுதாயம், நாடு குறித்த அக்கறையும் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத் தான் செய்கிறது. நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து வளர்த்து விட்ட இந்த தலையாய பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. ஆனால் சில விஷயங்களை யோசித்து, உடனடியாக நிறைவேற்றி எதிர்காலத்தில் சரி செய்துவிடலாம்.
முதலில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கப் பழக வேண்டும். நம் நாட்டைப் பற்றிய உயர்வான விஷயங்களை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். படித்து முடித்து நம் நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் போதிக்க வேண்டும்.வெளிநாடுகளில் தரப்படும் கணிசமான சம்பளம், தற்போது நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மேலும் ஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் என்றும், தவறு செய்தால் அவர் தரும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகளின் மனதில் திணிக்காமல், அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய மாணவ, மாணவியர் பெற்றோரை விட நன்றாகவே முடிவெடுக்கின்றனர். பெற்றோர் தங்களுக்கு எத்தகைய வேலை பளு இருந்தாலும், தினமும் அரை மணி நேரம், தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செலவழிக்க பழக வேண்டும்.
நம் குறிக்கோளும் மகிழ்ச்சியும் நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் தானே. தாங்கள் வாழ்க்கையில் சமாளித்த சிக்கலான சூழ்நிலைகளை பெற்றோர், அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை என்பது விளையாட்டல்ல என்பது அவர்களுக்குப் புரியும்.நம் மாணவர்கள் உருப்பட வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது... பெற்றோர், ஆசிரியர், காவல் துறையினர் ஆகிய மூவரும் அன்பு என்னும் சாட்டையைக் கையிலெடுக்க வேண்டும். இந்த சாட்டை வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக உண்மையான சாட்டையை கையிலெடுத்து, தவறு செய்யும் மாணவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அந்தந்த நிமிடமே தண்டித்து திருத்த வேண்டும். நம் நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் இதை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கற்றலில் சிரமத்தை எளிதாக்கும் 15 ஆண்டு வெற்றிப் பயணத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல்
கற்றலில் சிரமத்தை எளிதாக்கும் 15 ஆண்டு வெற்றிப் பயணத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல்
கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான மதிப்பீடு, ஆலோசனை, மாற்றுக் கல்வி முறையை செயல்படுத்தி கற்றலை எளிமைப்படுத்தும் வெற்றிப் பயணத்தில் 15ம் ஆண்டை எட்டியுள்ளது ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியாக சேலம் பாகல்பட்டியில் செயல்படுகிறது. கற்றலில் சிரமப்படும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படை க்கச் செய்தது குறித்து இதன் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் 600 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கியுள்ளது. முன்னணி ஐ.டி. நிறுவனங்கள், அனிமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாட்டை மிகச்சரியாக மதிப்பீடு செய்து அவர்களுக்கான மாற்றுக் கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. ஓப்பன் ஸ்கூல் சிஸ்டம், நாடகம், இயற்கை வேளாண்மை, ஓவியம், கலைப்பொருட்கள் செய்தல், பறவைகள் பார்த்தல், ரோபோட்டிக் என குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் தொழில் திறன் பயிற்சிகள் அளித்து அவர்களது தன்னம்பிக்கை மேம்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்குள் உள்ள தனித்திறனை கண்டறிதல் மற்றும் தொடர் பயிற்சிக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சித் திட்டங்கள் பல்வேறு பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. கற்றலில் சிரமப்படும் மாணவர்களுக்கான எந்த சேவைக்கும் எங்களை அணுகலாம். இன்றைய புதிய தொழில் நுட்பத்தில் மாற்றுக் கல்வித் திட்டம் மூலம் கற்றலில் சிரமத்தை எளிதாக்கலாம். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)