கற்றலில் சிரமத்தை எளிதாக்கும் 15 ஆண்டு வெற்றிப் பயணத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல்
கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான மதிப்பீடு, ஆலோசனை, மாற்றுக் கல்வி முறையை செயல்படுத்தி கற்றலை எளிமைப்படுத்தும் வெற்றிப் பயணத்தில் 15ம் ஆண்டை எட்டியுள்ளது ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியாக சேலம் பாகல்பட்டியில் செயல்படுகிறது. கற்றலில் சிரமப்படும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படை க்கச் செய்தது குறித்து இதன் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் 600 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கியுள்ளது. முன்னணி ஐ.டி. நிறுவனங்கள், அனிமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாட்டை மிகச்சரியாக மதிப்பீடு செய்து அவர்களுக்கான மாற்றுக் கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. ஓப்பன் ஸ்கூல் சிஸ்டம், நாடகம், இயற்கை வேளாண்மை, ஓவியம், கலைப்பொருட்கள் செய்தல், பறவைகள் பார்த்தல், ரோபோட்டிக் என குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் தொழில் திறன் பயிற்சிகள் அளித்து அவர்களது தன்னம்பிக்கை மேம்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்குள் உள்ள தனித்திறனை கண்டறிதல் மற்றும் தொடர் பயிற்சிக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சித் திட்டங்கள் பல்வேறு பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. கற்றலில் சிரமப்படும் மாணவர்களுக்கான எந்த சேவைக்கும் எங்களை அணுகலாம். இன்றைய புதிய தொழில் நுட்பத்தில் மாற்றுக் கல்வித் திட்டம் மூலம் கற்றலில் சிரமத்தை எளிதாக்கலாம். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.
No comments:
Post a Comment