தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் செய்தி
நாள்: 05.06.16
------------------------------------------------------------------------------------------------------
நடுவண் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு முதுகலை ஆசிரியர்கள் தான் பாடம் எடுக்கிறார்கள். இங்கு தான் நிலைமை தலைகீழ். அங்கு பதவி உயர்வு ஒரே நேர்க்கோடு. எங்கு வேண்டுமானாலும் போகலாம் பதவி உயர்வு பெறலாம் என்ற நிலைமை இல்லை. அங்கு 01.6.09 முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 18,150/- இங்கு 14,100/- ஊதியம், பதவி உயர்வு மற்றும் பணிச்சுமை ஆகிய அனைத்திலும் நாம் மிகவும் பின்னே. அதற்கு ஏற்றாற் போல் முதுகலை ஆசிரியர்களின் சங்க உணர்வும் பின்னுக்குப் பின்னே. அனைத்தையும் நாம் சாதிக்கலாம். எப்போது நம்மிடம் இருக்கும் போராட்ட ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தும் போது. விடைத்தாள் திருத்தும் பணி தான் மிகப் பெரிய மிகச் சிறந்த ஆயுதம். அதனைப் பயன்படுத்த தலைவர் மூர்த்தி காலத்திலியே பயன்படுத்தி தோல்வி தான் கண்டோம். அப்போது தான் நமது கோயபல்ஸ்கள் தீவிரமாக அரசுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அதனால் தான் நான் அந்த ஆயுதத்தை கையில் எடுப்பதில்லை. நீங்கள் அனைவரும் அதிகாரிகளுக்கும், அதிகாரத்திற்கும் பயந்து வேக வேகமாக திருத்துவீர்கள். தலைவர் காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு அறிவித்து மொத்தம் 39 பேர் மட்டுமே சிறைக்கு சென்ற காலம் உண்டு. நமது முதுகலை ஆசிரியர்கள் பின்புறமாக சுவர் ஏறி குதித்துச் சென்று விடைத்தாள் திருத்தினார்கள். அப்போது கோயபல்ஸ் அமைப்பு அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு விடைத்தாள் திருத்தியது. இன்று கூட நீங்கள் பார்க்கலாமே. நமது மாவட்ட அமைப்புகள் மு.க. அலுவலரைக் கண்டித்து ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால் உடனே மு.க.அலுவலருக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எவன் உண்மையானவன்.எவன் நமக்காக உழைக்கின்றவன் _ எது முதுகலை ஆசிரியர்களின் நலனில் அக்கரை உள்ள சங்கம் எனக் கண்டறிந்து செயல்படாத வரை எந்த பெரிய மாற்றுமும் மேனிலைக் கல்வியில் நடக்காது... நடக்க வே நடக்காது... இந்த அமைப்பின் பொறுபாளர் என் சாதிக்காரன், என்னோடு படித்தவன், எங்கள் வீட்டுக்காரருக்கு நண்பர் என பல காரணிகளைக் கொண்டு தவறான இயக்கத்தோடு தொடர்பு இருந்தால் என்றைக்கு நாம் மேனிலைக் கல்வியை உயர்த்துவது... சிந்தியுங்கள்... தெளிவு பெறுங்கள்...
-----------------------------------------------
வே.மணிவாசகன்,
மாநில தலைவர்,
TNHSPGTA
No comments:
Post a Comment