அன்புடையீர், வணக்கம்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து நிலை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியில் மிடுக்கைக் கொண்டு வந்ததில் காவலராகவும் ,பணிச்சூழலில் அவர்களுக்கு ஒரு இடையூறு என்றால் குரல் கொடுக்கும் சிங்கமாகவும், கனவிலும், நனவிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தையும்.மாநிலத்தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் பற்றி புறங்கூறியும், அவதூறு பரப்பியும், வதந்தி பரப்பியும் வாழ்க்கை நடத்தும் பதர்களுக்கு பேச்சால் பதில் தராமல், முதுகலை ஆசிரியர்களின் பணித்தொகுதி பாதிப்புகளைக் களைந்து செயலால் பதில் தருவதில் தன்னிகரில்லாத தலைவராகவும், நம்மைப் பற்றி யார் குறை கூறி பேசினாலும், அவர்களைப் பற்றியும், கோயபல்ஸ்களின் அமைப்பு பற்றி உங்கள் வாயால் எதுவும் கூறக்கூடாது என்று சொல்லும் பெருந்தன்மை மிக்கவராகவும், முதுகலை வேதியியல் ஆசிரியராக இருந்தாலும், நம் செந்தமிழை உச்சரிப்பதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் தமிழ்ப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரின் மாணவர் போலவும், பள்ளியில் பணியோடு, சிறு கூடுதல் பொறுப்பு கிடைத்தாலே பிறரை ஏற, இறங்க பார்ப்பவர்களுக்கு மத்தியில்,தனக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம், முதுகலை ஆசிரியர் பணித்தொகுதி உயர்வடைந்தால் போதும் என பாடுபட்டு வருவதில் தியாகத்தின் உருவமாய் வாழ்ந்து வருபவரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்து வருபவராம் ஐயா, உயர்திரு, வே.மணிவாசகன் அவர்களின் சேவையைப் பாராட்டி தமிழ் செம்மொழி பல்கலைக்கழகம் அன்னாருக்கு முனைவர் பட்டம் அளித்து பெருமை படுத்தியுள்ளது. முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. எனவே அனைத்து நிலை மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள், நண்பர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் தங்களின் மேலான வருகையை எதிர்நோக்கும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அடங்கிய விழாக்குழுவினர்.
(இந்த செய்தியை படிக்கும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தம் பள்ளி சக ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், இச்செய்தியைப் பகிரும்படி அன்புடன் வேண்டுகிறோம்).
நன்றி கலந்த வணக்கத்துடன்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.தமிழ்நாடு.
No comments:
Post a Comment