கரூரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கை என்பதையும்,சமுதாயத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதையும் உணர்த்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.
அன்னை, தந்தைக்கு பிறகு ஒரு ஆசிரியர்தான் குழந்தையை உலகத்தில் சிறந்து வாழ கற்றுத் தருகிறார். அந்த அளவிற்கு ஆசிரியர் பணி ஒரு சிறந்த பணி. தன்னிடம் ஒப்படைக்கும் மாணவனை நல்லவனாக ஆக்குவதோடு நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உள்ளது. இதனாலேயே உலகில் எங்கும் பணியாற்றினாலும் ஆசிரியர்களுக்கு தனி மரியாதை கொடுக்கப்படுகின்றது.

மேலும், கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. காரணம், அங்கு பயிலும் மாணவன் பின்னாளில் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும், ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த பணிக்கு சொந்தமுள்ள நீங்கள் இன்னும் அதிக மாணவர்களை ஊக்குவித்து சாதனை படைக்கச் செய்ய வேண்டும். மேலும் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு நம் மாவட்டத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற 2 ஆசிரியர்கள், மாநில விருது பெற்ற 5 பேர், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த தலைமை ஆசிரியர்கள் 150 பேர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 80 பேர் என மொத்தம் 1,612 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
முன்னதாக விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி வரவேற்றார்.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment