புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

15 February 2023

2022-23 பொது தேர்விற்கான தேர்வுப் பணிகள் குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை  தர்மபுரி மாவட்ட தலைவர் திரு.அருண்குமார் தலைமையிலான பொறுப்பாளர்கள் சந்தித்து 202-23 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வு பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்

அந்த மனுவில் நடைபெற உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில்,  வினாத்தாள் கட்டுக்காப்பாளர் முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர் வழித்தட அலுவலர் மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்

ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு பணியானது,  இருப்பிட முகவரியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்பட்டதாக அமைய வேண்டும்

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நலம் குன்றியோர், மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு  தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.

31 July 2022

இதயம் என்ன இரும்பா?மாணவர்களுக்கு கற்பிப்பதா? இல்லைதப்பிப்பதா?. ஒரு அலசல் கட்டுரை

https://drive.google.com/file/d/1oqkp20UtygIJaVIBmCGeITjOeHmwR__S/view
ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா?
மாணவர்களுக்கு கற்பிப்பதா? இல்லை
தப்பிப்பதா?. ஒரு அலசல் கட்டுரை

26 May 2021

மாநிலத் தலைவர் திரு வே மணிவாசகன் அவர்களின் பேட்டி

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு வே மணிவாசகன் அவர்களின் பேட்டி 
https://www.dropbox.com/s/2do6tjyj3h2lhpv/VID-20210526-WA0025.mp4?dl=0

19 December 2017

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

👏Sooooooper High Court👏
Read on......

*V V V Important for all of us*

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.
பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.
ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?
இல்லவே இல்லை!
நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.
அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார்.
இந்தக் கொள்ளையை எதிர்த்து,  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.
மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

இதோ நண்பர்களே, அந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்துவிட்டது!

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CBwQFjAA&url=http%3A%2F%2Findiankanoon.org%2Fdoc%2F102996905%2F&ei=hi6dVYOlL4K4uATehKKgDA&usg=AFQjCNGHQb5xxpWfQJ4g8RRdl3TO6_sR5Q

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!
எல்லோருக்கும் போய்ச் சேருமளவு இத் தகவலைப் பரப்புங்கள்!🙏

19 September 2017

TNHSPGTA NEWS PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.


அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது.

தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.

1,060 காலியிடங்கள்

இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். 

எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன.

விரைவில் அடுத்த தேர்வா?

பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார்.

இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது,"தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

18 March 2017

ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.

தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் விதிகள் விதி 41A ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் ஒரு அரசு பணியாளர் கொடுக்கும் விலகல் கடிதத்தை உடனே உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள கூடாது. ஆனால் உயர் அதிகாரிகள் விதி 41(b)யின்படி ஒரு அரசு ஊழியர் விலகல் கடிதத்தை கொடுத்து அது ஏற்றுக் கொண்ட பிறகு அந்த கடிதத்தை அரசு ஊழியர் திரும்ப பெறவே முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விதி 41A - மூன்று காரணிகளை உள்ளடக்கியது. (1)- 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை கொடுக்க வேண்டும். (2)- அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்றுக் கொள்ள வேண்டும். (3)- அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்ப பெறுதல் அறிவிப்பு குறித்து விதி 41A(a) ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட காலஅவகாசம் அளித்து, அந்த பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது குறித்து அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்க வில்லை என்றால் விதி 41A(c) ன்படி அந்த பணி விலகல் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். பணி விலகல் குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர், அந்த பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவினை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது, எனவே ஒரு அரசு ஊழியர் பணியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்தால் அந்த அரசு ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 19361/2014 DT - 16.06.2016, G. Parameshwari Vs Register, Chennai high Court and Others (2016-5-CTC-161)

23 January 2017

TNHSPGTA State General Body meeting Held in Thanjavur on 22.1.17 at St.Antony's HSS

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொதுக்குழுகூட்டம

           22.01.2017 அன்று வீரம் பொருந்திய தஞ்சை மண்ணில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப்பொதுக்குழு, மாநிலத் தலைவர் முனைவர் *திரு.வே. மணிவாசகன்*  

 நடைபெற்றது.மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.💐


அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா.பிரபாகரன் அவர்கள் 20 தீர்மானங்கள் வாசிக்க, அத்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன. 



 அப்பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் மாநில, மாவட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


 💐மேலும்  நமது தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம்,  மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலாளர் T.செல்வம், மாவட்ட பொருளாளர்,  சுப்பிரமணி மற்றும்  மாவட்டப்  செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டோம். .💐


அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் அரசு பொதுத் தேர்வுப் பணி உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரி 

⚫⚫⚫⚫

இரண்டு கட்ட 

போராட்டங்கள்

 ⚫⚫⚫


1. துறை அலுவலர்,பறக்கும் படை அலுவலர் கூட்டங்கள்  புறக்கணிப்பு செய்வது.


 2. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முழு மனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்  கொள்கிறோம்.

 அதனை வெற்றியடைய செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதால் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து போராட்டம் வெற்றியடையச் செய்ய  வேண்டுகிறோம். மாநில பொதுக்குழுவை மிகச்சிறப்பான முறையில்  அனைத்து விதத்திலும் பாராட்டும் விதத்தில் நடத்திய தஞ்சை மாவட்டத் தலைவர் ,மாவட்ட தலைவர்,குமார் மாவட்ட செயலாளர் கோபிசந்தர் மற்றும் பொறுப்பாளர்கள், அம்மாவட்ட முதுகலை ஆசிரிய நண்பர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த  அனைவருக்கும்  மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐


 ஜி.ஆரோக்கியம்

மாவட்ட செய்தி தொடர்பாளர்,   தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், 

தருமபுரி மாவட்டம்.*


மாநில பொதுக்குழு தீர்மானங்கள