தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தர்மபுரி மாவட்ட தலைவர் திரு.அருண்குமார் தலைமையிலான பொறுப்பாளர்கள் சந்தித்து 202-23 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வு பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்
அந்த மனுவில் நடைபெற உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கட்டுக்காப்பாளர் முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர் வழித்தட அலுவலர் மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்
ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு பணியானது, இருப்பிட முகவரியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்பட்டதாக அமைய வேண்டும்
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நலம் குன்றியோர், மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.