புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

29 July 2023

தமிழக அரசின் *தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்* சார்பில் 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.



தமிழக அரசின் *தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்* சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்.

 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்.

www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்

29 April 2023

கன்னியா குமரி மாவட்டம் முதுகலை பட்டதாரி காலிப் பணியிடங்கள் :*2023

*கன்னியா குமரி மாவட்டம் முதுகலை பட்டதாரி காலிப் பணியிடங்கள்  :*

*P. G. English*

*1. நல்லூர்*

*2. விளவங்கோடு*

*3. அருமனை*

*4. SLB, நாகர்கோவில்*

*5. கொட்டாரம்*

*6. சுண்டப்பற்றி விளை*


*P. G. தமிழ்*

*1. நட்டாலம்*

*2. மார்த்தாண்டம் (ஆண்கள்)*

*3. ஆனைகுழி*

*4. கடியப்பட்டினம்  (மகளிர்)*


*P. G. கணிதம் :*

*1. ராஜாக்கமங்கலம்*

*2. இடலாக்குடி*

*3. மாதவலாயம்*

*4. ஒற்றையால் விளை*

*5. மார்த்தாண்டம் (ஆண்கள்)*

*6. நட்டாலம்*


*P. G. வேதியியல்*

*1. கொடுப்பைக்குழி*

*2. அருமனை*

*3. S. L. B., நாகர்கோவில்*

*4. வடசேரி*


*P. G. தாவரவியல் :*

*1. ஆளூர்*

*2. விளவங்கோடு*

*3. தோவாளை*

*4. அகஸ்தீஸ்வரம்*


*P. G. பொருளியல்  :*

*1. கீழ்குளம்*


*P. G. வணிகவியல்  :*

*1. KDVP கோட்டார்*

*2. கண்டன்விளை*

*3. ஆரல்வாய்மொழி*

*4. தாழக்குடி*

28 April 2023

திருவாரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் As on 31.05.2023

ராமநாதபுரம் மாவட்ட முதுகலை ஆசிரியர் காலி பணியிட விவரம் 31.05.2023 நிலவரப்படி

நாகை மாவட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 31.05.2023 நிலவரப்படி

தஞ்சாவூர் மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 31.05.2023 நிலவரப்படி

பிற மாவட்ட முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மற்றும் அறிய Visit *www.tnhspgtadharmapuri.blogspot.com*
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNHSPGTA)

தஞ்சாவூர்  மாவட்ட காலிப்பணியிடங்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான செய்திகளை அறிய  இங்கே கிளிக் செய்யவும் 👇🏽👇🏽👇🏽

சேலம் மாவட்ட முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் 31.05.2023 நிலவரப்படி TNHSPGTA(தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்)

கோயம்புத்தூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் 31.05.2023 நிலவரப்படி

27 April 2023

தர்மபுரி மாவட்டம் அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)சார்பில் வாயிற் கூட்டம்

தர்மபுரி மாவட்ட முதுகலை ஆசிரியர் காலி பணியிட விவரம் 31.05.2023 நிலவரப்படி

* Teachers Vancancy as on  31.05.2023 in Dharmapuri Dt* 

*TAMIL*
1.Nallampalli
2.Karimangalam Girls
3.Sitling

*MATHS*
1. Avvaiyar Girls,Dharmapuri (Additional)
2.Eriyur Additional

*PHYSICS*
1.Pulikarai
2.Krishnapuram
3.Panchapalli (Additional Post)

*CHEMISTRY*
1.B.Thurinjipatti
2.Eriyur (Additional)
3.Neruppur

*BOTANY*
1.Pulikarai
2.Marandahalli Girls

*TNHSPGTA DHARMAPURI*
Visit our website for other district PG Vacancies www.tnhspgtadharmapuri.blogspot.com

*HISTORY*
1.Kadathur Girls
2.Harur Boys
3.Kamalapuram

*ECONOMICS*
1 Adhiyaman Boys Dharmapuri
2.Pappireddipatti Boys

*COMMERCE*
1.Jalipudur

*Physical Director*
1.Adhiyaman boys

29 March 2023

மாநிலத் தலைவரின் மகத்தான சாதனைகள் 🏆🏆🏆

_*தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் திருமிகு.வே.மணிவாசகன் அவர்களின் சாதனைகள்...*_

1) மாணவர்கள் நலன் கருதி அரசுப் பொதுத்தேர்வில் வினாத்தாட்கள் படிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் பெற்றது.

2) 30 ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த மேல்நிலைக்கல்விப் பணியில் பதவி உயர்வுகளில் மாற்றம் கொண்டு வர
அரசாணை 720-ல் திருத்தம் செய்ய ஒரு நபர் குழு அமைக்கச் செய்தது.

3) முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம்
செய்ய அரசாணைப் பெற்றது.

4) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடுகனை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு மாற்றம்
செய்தது.

5) மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 : 25 என்று இருந்ததை 40 : 35 என திருத்தம் செய்தது.

6) செய்முறைத் தேர்வில் மாணவர்கள் இயற்பியல் பாடத்தில் கணிப்பான் பயன்படுத்த அனுமதிப் பெற்றது.

7) செய்முறைத் தேர்வில் வேதியியல் பாடத்தில் இரட்டை உப்பு ( கலப்பு உப்பு ) சோதனை முறையை நீக்கம் செய்து ஒற்றை உப்பு சொதனை செய்ய ஆணைப் பெற்றது.

8) செய்முறைத் தேர்வில் விலங்கியல் பாடத்தில் இடம் பெற்ற உமிழ்நீர் சோதனை நீக்கம் செய்து ஆணைப் பெற்றது.

9) அனைத்து அறிவியல் பாடங்களின் தேர்ச்சிக்கு பெறவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 40 லிருந்து 30 ஆக குறைத்து ஆணைப் பெற்றது.

10) விடைத்தாள் திருத்தும் பணியில் கைப்பிடி, தினப்படி படிகளை இரு மடங்காக உயர்த்திப் பெற்றது.

11) இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தொடராணைப் பெற்றது.

12) ஊக்க ஊதியம் பெறுவதில் உள்ள இடர்பாடுகளுக்குத் தெளிவுரைப் பெற்றது.

13) M.Phil., முன் அனுமதி பெறாமல் பயின்றவர்களுக்கு பின்னேற்புப் பெற்றது.

14) வினாத்தாள் கட்டுக் காப்பாளராக (Question Paper Custodian) முதுகலை ஆசிரியர்களை நியமிக்க ஆணைப் பெற்றது.

15) இருபத்தி இரண்டு ஆண்டுக் கனவான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப்
பெற்றுத் தந்தது.

16) தேர்வுப்பணிகளை 15 - 20 கி.மீக்கு இருக்க வேண்டும் என தெளிவுரைப் பெற்றது.

17) பறக்கும் படையில் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என செயல்முறைகள் பெற்றது.

18) வினாத்தாட்கள் - விடைத்தாட்கள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் ( Route Officer) பெற்றது.

19) ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் மீண்டும் நடத்த வேண்டும் என
அரசாணைப் பெற்றது.

20)1590 + 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பெற்றுத் தந்தது.

21) மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாள் திருத்தும் நடுவம் என இருந்ததை, முதுகலை ஆசிரியர்களின் பயணத் தூரத்தை
குறைக்கும் பொருட்டு ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒன்று எனவும், ஒரு சில மாவட்டங்களில் மேலும் கூடுதலாக ஒன்று
என விடைத்தாள் திருத்தும் நடுவங்கள் அதிகம் பெற்றது.

22) 2010 - 2011 மற்றும் 2011 - 2012 ல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்காக இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம்
அறிவித்து, அழுத்தம் தந்து பணிவரன் முறைப் பெற்றது.

23) 2006 ல் மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 200 மதிப்பெண் ஆக இருந்த போது (மொத்த மதிப்பெண் 1200) மொழி பாடங்களுக்கு (Language Papers) 180 மதிப்பெண் திருத்தும் செய்ய 15 விடைத்தாள்களும், முக்கிய பாடங்கள் Main Subjects) 150 மதிப்பெண் மற்றும் கணிதம் 200 மதிப்பெண் திருத்தும் செய்ய 12 விடைத்தாள்களும், உயிர்- தாவரவியல் மற்றும் உயிர்- விலங்கியல் பாடங்களுக்கு 10+10 என வழங்கப்பட்டு வந்தது. விடைத்தாள் எண்ணிக்கையை குறைத்து திருத்தம் மேற்கொள்ள தலைவர் அவர்கள் எடுத்த தொடர் முயற்ச்சி வாயிலாக மொழிப்பாடங்களுக்கு 12 விடைத்தாள்களும், முக்கிய பாடங்களுக்கு 10 விடைத்தாள்களும், உயிர்- தாவரவியல் மற்றும் உயிர்- விலங்கியல் பாடங்களுக்கு 
8 + 8 எனக் குறைத்து திருத்துவதற்கான செயல்முறைகள் பெற்றது.

        தற்போது மேல்நிலை தேர்வு ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதால் (மொத்த மதிப்பெண் 600) ஏற்கனவே குறைக்கப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை பேச்சு வார்த்தையின் மூலம் மீண்டும் அதிகரித்து வழங்கப்படுகிறது. தற்போது மொழிப் பாடங்களுக்கு 15 விடைத்தாள்களும், முக்கிய பாடங்களுக்கு 12 விடைத்தாள்களும், உயர்த்தியும், உயிர்- தாவரவியல் மற்றும் உயிர்- விலங்கியல் பாடங்களுக்கு 8+8 என மாற்றம் இல்லாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

24) 2011 - 2012 ல் பணியேற்ற 630 முதுகலைத் தமிழாசரியர்களின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பணிவரன்முறை ஆணைப் பெற்றது.

25) 2016 - 2017 ஆண்டிற்கு 1600 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடம் பெற நீதி மன்ற ஆணை பெற்றது.

26) விடைத்தாள் திருத்த உழைப்பூதியம் 2006 ல் ரூ.2.75/- இருந்ததை மாற்றக் கோரி மண்டல அளவிலான போராட்டங்களை நடத்தியதன் விளைவாக விடைத்தாள் திருத்த உழைப்பூதியம் ரூ. 5/- என அரசு நிர்ணயம் செய்து வழங்கியது. பின்னர் தாளுக்கு ரூ.10 /- அளிக்க வேண்டி கோரிக்கை வைத்ததில் அரசு ரூ.7.50 /- உயர்த்தியது.அதுவே தற்போத ரூ.10/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.இது அனைத்தும் நமது அமைப்பின் சார்பாக மாநிலத் தலைவர் முன்னெடுத்து செய்த பல போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

27) 2018 முதல் மேல்நிலை பொதுத் தேர்விற்கான உழைப்பூதியம் அனைத்தும் 15 % உயர்த்தி ஆணை பெறப்பட்டது

28) விடைத்தாள் திருத்தும் முகாமில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உழைப்பூதியம் இரட்டிப்பாக்கியது.

29) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான தொகுப்புப்படி உயர்த்தி பெற்றது.

30) விடைத்தாள் திருத்தும் முகாமில் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராக (MVO) நீண்ட காலமாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருந்ததை மாற்றி தற்போது மூத்த முதுகலை ஆசிரியர்கள் மட்டுமே மதிப்பெண் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராக (MVO) நியமித்திட அனுமதி பெற்றது.

31) மாவட்டத்திற்குள் முதுகலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் விடைத்தாள் திருத்தும் முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ள அனுமதி பெற்றது 

32) மேல்நிலைப் பிரிவில் படிக்கும் மாணக்கர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மொழித் தாள் - I மற்றும் மொழித் தாள் - II என்று நீண்ட காலமாக இருந்ததை விடைத்தாள் திருத்தும் முகாமில் விடைத்தாட்களை திருத்துவது கிடப்பில் போட்டு நடத்திய தொடர் போராட்டத்திற்கு பிறகு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரே மொழித் தாளாக மாற்றம் பெற்றது.

33) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதுகலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த இருந்ததை சாதுர்யமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் தனக்கான பாணியில் தடுத்து நிறுத்தி முறையான‌ கலந்தாய்வு நடத்தியதால்‌ 9450 முதுகலை ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு மாறுதல் ஆணை பெற்று பயனடைந்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும்.

34) நமது 16 ஆண்டு கால தொடர் கோரிக்கையான ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தற்போது தமிழக அரசு ஏற்று சட்ட மன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதை மட்டுறுமொரு வரலாற்றுச் சாதனையாகும்.

        பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான நமது மாநிலத் தலைவர் அவர்களின் முக்கிய சாதனைகள் மட்டுமே மேலே பட்டியலிடப்பட்டுள்ளன... இவற்றில் ஒருசில முக்கிய சாதனைகளும் விடுபட்டு இருக்கலாம்... இருப்பினும் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நன்றி.

*வாழ்க ! மாநிலத் தலைவர் திருமிகு.வே.மணிவாசகன்*

*வளர்க!! தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்*

இவண்:

*தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.*

14 March 2023

தேர்வு நிலை ஆணை குறித்து - களத்தில் TNHSPGTA - dharmapuri

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தற்போது வரை 
*தேர்வு நிலை ஆணை* கிடைக்கப்பெறாத ஆசிரியர்களின் கோரிக்கை குறித்த தகவல்கள் நேற்று மாலை தொடங்கி 
*இரவு 12:45* மணி 
வரையில்  சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டது
மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பொது தேர்வு பணி இருந்த போதிலும்..
தேர்வு முடித்து நேராக மாவட்ட கல்வி அலுவலர் சந்தித்து உடனடியாக மேற்காண் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது..

*வலியுறுத்தியதோடு மட்டுமின்றி இரவு எவ்வளவு நேரம் ஆயினும் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள் செயலாக்கம் பெறுகிறதா? என கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளோம்*..


விரைவில் இந்த பணிகளை முடித்து தருவதாக மாவட்ட கல்வி அலுவலரும் உறுதி அளித்துள்ளார்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

19 February 2023

19-02-2023 கடலூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமது மாநிலத் தலைவர் முனைவர் திரு மணிவாசகனார் அவர்களின் அன்புத் தாய் சேதுமணி வேணுகோபால் அவர்களின் 91 வது பிறந்த நாள் விழாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூபாய் 2000 வழங்கும் விழா நிகழ்வுகள்

19-02-2023 கடலூரில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமது மாநிலத் தலைவர் முனைவர் திரு மணிவாசகனார் அவர்களின் அன்புத் தாய் சேதுமணி வேணுகோபால் அவர்களின் 91 வதுபிறந்த நாள் விழாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூபாய் 2000 வழங்கும் விழா நிகழ்வுகள்.
அம்மாவின் ஆயுள் நீடித்து அவரின்  கொடைத் தன்மை வளரட்டும்.