30 September 2015
17 September 2015
உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.
11 September 2015
TNHSPGTA SPECIAL MEETING AT TRICHY ON 12.09.2015
5 September 2015
முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!