புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

27 February 2015

சென்னை ஜேக்டோ உயர்மட்டகுழு கூட்டம் (25.02.2015)

சென்னை  ஜேக்டோ உயர்மட்டகுழு  கூட்டத்தில் தமிழ்நாடு  மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 
மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் பங்கேற்பு 





24 February 2015

பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்

பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த ஆசிரியர் பயிற்சியை 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய கல்வியியல் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்தது. தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கூட்டமைப்பு மத்திய அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், 2016-17ம் கல்வியாண்டில், இந்த 2 ஆண்டு படிப்பை தொடங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இதற்கான கால அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

23 February 2015

CTET' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு

 மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, 'சி - டெட்' எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய "நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு' குறித்த கருத்தரங்கில் அவர் கூறியது: பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வாரம் ஒரு நாள் விளையாட்டு வகுப்பு என்பதற்கு பதிலாக நாள்தோறும் விளையாட்டு வகுப்பை நடத்த வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா !

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகள் முடிந்த பின் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

DHARMAPURI DISTRICT JACTTO MEETING ON 22.02.2015