2.1.15 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழக தருமபுரி மாவட்ட தலைவர் இ பி தங்கவேல்,
மண்டல செயலர். ஆர்.செல்வம்,வையாபுரி,
ஞானசிகாமணி,முருகன்,அருண்குமார், சேகர், தமிழ்வாணன்
இராஜசேகர் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள்
முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி,
மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன்,மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்(பொ ) திரு.பாலாஜி மற்றும்
RMSA COORDINATOR திரு.சுப்ரமணி ஆகியோரை சந்தித்து
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம். தருமபுரி மாவட்டத் TNHSPGTA தலைவர் திரு E.P.தங்கவேல் , மற்றும் பிற ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவராக திரு வே . மணிவாசகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
மாநில பொறுப்பாளர்கள், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுடன் சந்திப்பு
மாநில தலைவர், வே.மணிவாசகன்,
மாநில பொது செயலாளர், இரா.பிரபாகரன், மதுரை.
மாநில பொருளாளர், ஆ.கிருஷ்ணன், வந்தவாசி.
மாநில அமைப்பு செயலாளர், இரா.புஸ்பராசு, நாமக்கல்.
மாநில தலைமைஇட செயலாளர், பொ.பாலசுப்ரமணியன், சென்னை
மாநில செய்தி தொடர்பாளர், ஆர்.செல்வம், தருமபுரி.
மாநில பிரசார செயலர், அ.க.வடிவேல், புதுகோட்டை.
மாநில மகளிர் அணி செயலாளர், திருமதி.கே.முத்துகுமாரி, தேனி.
மாநில சட்டத்துறை செயலாளர், இரா.சீனிவாசன், கிருஷ்னகிரி,
08.02.15 அன்று தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தலைமை மாவட்டத் தலைவர் திரு . E.P. தங்கவேல்
சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல், மாநில துணைத் தலைவர், கரூர்
ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம்
அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழகம்
சார்பில் 28 மாவட்டங்களில் 01.04.15 அன்று கண்டன ஆர்பாட்டம்
மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின்
அறிக்கை
1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை, எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேர்வு அறைகளில் மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள் கண்டு பிடித்தால், அறை கண்காணிப்பாளர்கள்மீது
பணி இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15 அன்று மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
( R.செல்வம்)
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தென்மாவட்ட கூட்டம் மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் சாத்தூரில் நடைபெற்றது (விருதுநகர் மாவட்டம்)
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
மதுரை
தேனி
புதுகோட்டை
அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்
ஆர்ப்பாட்டம்
மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ், மாநில துணைத்தலைவர், சக்திவேல், நாமக்கல்மாவட்ட செயலர் ராமு, நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன், ஈரோடு மாவட்ட செயலர், திம்மராயன், கரூர் மாவட்ட மகளிரணி செயலர், உமா உள்ளிட்டோர் கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி துண்டறிக்கைகளை வழங்கினர்.
நீலகிரியில் 19.04.15 அன்று நடைபெற்ற ஜேக்டோ உண்ணா நிலை போராட்டம்
19.04.15 இன்று சரியாக காலை 10.30 மணிக்கு வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.அதில் நமது அமைப்பை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு.கா.பாஸ்கரன் அவர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.நமது அமைப்பின் பெரும்பாலான முதுகலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.அவர்களுக்கு வேலூர் மாவட்ட தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
19.04.0-15 கரூர் ஜேக்டோ விரதம்
SALEM JACTO 19.4.15
25.04.15
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015 அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப் பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
- ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
- 1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும்
- தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
- வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு பருவத் தேர்வு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
- 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
- நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்
- கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
5.5.15 தருமபுரி, கிருஷ்ணகிரி , வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கோடை பயிற்சி 04.05.0-15 அன்று ஜவ்வாது மலை, ஜமூனாமரத்தூரில் மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில் நடைபெற்றது
14.05.15 திண்டுக்கல் மாவட்டம் - பாராட்டு விழா, மாநில பொது செயலாளர் பிரபாகரன் பங்கேற்பு
பதவி உயர்வு , பணி நிறைவு, நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு திண்டுகல்மாவட்ட தலைவர் சலேத் ராஜா தலைமையில் நடை பெற்றது . மாநில பொது செயலாளர் பிரபாகரன், மாநில துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
5.7.15
முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை
விரைவில் நடத்திட,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக
மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை
அனைத்து நிலை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இதுவரை நடத்தப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமையாசிரியர் பணியிடங்களும் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. ஆகவே இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை நடத்தும் பொழுது, 2015-16ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளின் பெயர்களையும் அறிவித்து, அதற்கு தோற்றுவிக்கப்படும் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு , காலி பணியிடங்களை முறையாக அறிவித்து, முதலில் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் என்ற முறையில், ஒளிவுமறைவின்றி, எவ்வித முறைகேடும் இல்லாத வகையில், முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
இங்ஙனம்
வே.மணிவாசகன்
20.07.15 விழுப்புரம் விடைத்தாள் திருத்தும் மையம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் மாநில த லைவர் மணிவாசகன் சந்திப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு
புதுகோட்டை மாவட்ட உறுப்பினர்களுடன் மாநில பொது செயலாளர் திரு.பிரபாகரன் சந்திப்பு
பெரம்பலூர் மாவட்ட உறுப்பினர்களுடன் மண்டல செயலாளர் திரு. கதிரேசன் சந்திப்பு
27.08.15 மாநில பொதுக்குழுக் கூட்டம் -வேலூர் . மாநில தலைவர் மணிவாசகன் பங்கேற்பு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு இலண்டன்,உலக தமிழ் செம்மொழி பல்கலைக்கழகத்தால்மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மாநில கழகத்தின் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா