முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர் கல்வி படிப்பதற்க்காண ஊக்கதொகை பெற விரைவில் புதிய முறையை கொண்டுவர பள்ளிகல்வித்துறை முடிவு செய்யும் என தெரிகிறது . அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் M.Ed பட்டம் பெற்றிருந்ததால் அதற்கு ஒரு ஊக்க ஊதியமும், M.Phil, PhD., PGDTE., இவற்றில் எதேனும் ஒன்றுக்கு இன்னொரு ஊக்க ஊதியமும் பெற தகுதியுடையவர் ஆவர் .
தற்போது தொலைதுரக்கல்வி மூலம் M.Ed படிக்ககூடிய வாய்ப்பு குறைந்து விட்டதால் M.Phil, PhD., PGDTE., இவற்றில் எதேனும் இரண்டு படிப்புகளை கணக்கில் கொண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரு ஊக்க ஊதியங்கள் வழங்கினால் ஆகும் உத்தேச செலவின அறிக்கையை பள்ளிக்கல்வி துறை கோரியுள்ளதால் புதிய முறையை கொண்டுவர பள்ளிகல்வித்துறை முடிவு செய்யும் என தெரிகிறது